வாழ்க்கையில் சிகரம் எட்ட…!


வாழ்க்கையில் சிகரம் எட்ட…!

Ø  மாற்றம் என்பது இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை.
தங்கள் மன அமைவை மாற்றிக்கொள்ள முடியாதவரால் எதையும் மாற்ற முடியாது !
Ø  வெற்றிக்கு வகை செய்யும் சில முக்கியப் பண்புகள் :
உண்பை, நேர்மை, அடக்கம், அன்பு, அடுத்தவர் உணர்வை மதிக்கும் தன்மை!
Ø  அபாய நிலைகளை எதிர்கொள்ள தயங்காதீர்கள்.
அபாயங்களை எதிர்நோக்குவதன் மூலம், நாம் துணிச்சலாய் இருக்கக் கற்றுக் கொள்கிறோம்!
Ø  இணக்கமற்ற சூழ்நிலைகளில் இருந்து வெற்றியை ஈட்டுவதற்காக இடைவிடாது போராடுவதும்,
ஒய்வின்றி போரிடுவதுமே மிகப்பெரிய சாதனைக்கு நீங்கள் கொடுக்கின்ற விலை.
Ø  உங்கள் குறிக்கோள்களுக்கு எழுத்து வடிவம் கொடுங்கள், அந்நிலையில் அது காண தக்கதாயும்,
உணரத்தக்கதாயும் இருக்கும்!அதன் பிறகு அதுவெறும் எண்ணாயிருக்காது..பொறுப்பாகிவிடும்!
Ø  தகுதியான ஒன்றை செய்வதற்கு தகுதியான சூழ்நிலை வரட்டும் என்று காத்திருக்காதீர்கள்.
சாதாரண சூழ்நிலைகளையே தகுதியாக்கிக் கொள்ளுங்கள்!
Ø  மதிப்புமிக்க எதுவும் எளிதாய் கைக்கு வந்து விடாது.உழையுங்கள், தொடர்ந்து உழையுங்கள்…
கடினமாக உழையுங்கள்…அதுவே, நிலையான பலன்களைத் தரும்!
Ø  பயன்படுத்தாத துணிவுவும், பொறுப்புணர்வும் தன்னால் மங்கிவிடும்.
பகிர்ந்து கொள்ளப்படாத அன்பு பாழாகி போய் விடும்!
Ø  நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடாமுயற்சியை நண்பனாக்கிக் கொள்ளுங்கள்
அனுபவத்தை ஆலோசகராக்கிக் கொள்ளுங்கள்!
Ø  நிலையான வெற்றியை பெறுவதற்கு உங்கள் கொள்கையிலும்
செயல்முறையிலும்- நீங்கள் நிலையாக இருக்க வேண்டும்!
Ø  வெற்றியால் நீங்கள் வலிமை பெற்றுவிடுவதில்லை,உங்கள் போராட்டத்தை
வாழ்க்கையின் துன்ப நிலையிலும் விட்டுவிடாமல் இருக்கிறீர்களே…அது தான் வலிமை.
Ø  யார் வாக்கு தவறாதவனோ,நேர்மையாய் சிந்திக்கிறவனோ,
மக்கள் அவனையே மதிக்கின்றனர், நம்பிக்கை வைக்கின்றனர்
Ø  வாழ்க்கையை உருவாக்கப் பயன்படும் காலத்தை வீண்டிக்காதீர்.
உங்களால் முடிந்த ஒவ்வொரு கணத்தையும் பயன்படுத்துங்கள்!
Ø  சரியானதோர் திட்டம் என்பது சாலையின் வரைபடம் மாதிரி.
உங்கள் இலக்கை சென்றடைய அதுவே சிறந்த வழி!
Ø  செடிகள் பூப்பதற்கு தேவை தரமான விதையும், தகுதியான மண்ணும்!
நல்ல சிந்தனைகள் வளர்வதற்கும் அதுவே தேவை!
Ø  அறிவாற்றலின் பயன் அழிதாகவே இனங் காணப்படுகிறது.
அது, கடின காரியங்களையும் எளிதாக்கும் திறன்!

Comments