நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா?


நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா?


      ரயில் இப்ப வருமோ…எப்ப வருமோ? என்ற கவலையா? ஆனா இனிமே அந்த கவலையோ, டென்ஷனோ வேண்டாம் என்கின்ற மாதிரியான புதிய தொழிழ்நுட்ப வசதியினை கான்பூர் ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

      நாம் எங்காவது பயணிக்க வேண்டி ரயிலுக்குக் காத்துக் கொண்டிருக்கையில் ரயில் சரியான நேரத்திற்கு வரவில்லையென்றால் டென்ஷன் தான். அந்த சமயத்தில் ரயில் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது; எப்போது வந்து சேரும் என்பன போன்ற கேள்விகள் நம்மைக் குடைந்தெடுக்கும். அந்த பரபரப்புக்கு முற்றுப்புற்றி வைக்கும் விதமாக வந்துவிட்டது இந்த புது வசதி.

     ரயிலின் நம்பரை மொபைலில் டைப் செய்து,0945139139 அல்லது 09664139139 என்ற எண்ணுக்கு sms  செய்தால் போதும், ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டு இருக்கிறது என்பதை உங்கள் மொபைல் போன் மூலமே தெரிந்து கொள்ளலாம். இந்த வசதியை பெற ரயிலில் ரூ 50,000 செலவிலான ஒரு ரிசீவரை பொருத்த வேண்டும். ரயில் டிராக்கர் வகையிலான இந்த திட்டத்துக்காக, ரயில்வே துறை 121 கோடி ரூபாய் செலவளித்துள்ளது.

      தற்போது இந்த வசதி, ராஜதானி, சகாப்தி, டொரான்டோ போன்ற அதிநவீன ரயில்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அனேகமாக இந்த ரயில் டிராக்கர் வசதி அனைத்து ரயில்களிலும் செய்யப்படலாம். இந்த ரயில் டிராக்கிங் வசதியினைப் பெற இஸ்ரோவிடமும் அனுமதி வாங்கி விட்டதாம் இந்திய ரயில்வே துறை .

Comments

 1. நல்ல தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 2. தகவலுக்கு மிக்க நன்றி......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 3. தகவலுக்கு மிக்க நன்றி......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்