ஈழம்


இந்த 12 வயது சிறுவன் படங்களை ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Prof. Derrick Pounder உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து சிறுவன் பாலச்சந்திரன் (விடுதலை புலிகள் பிரபாகரன் கடைசி மகன் ) மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.

குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் , A WELL PLANNED COLD BLOODED MURDER என்றும் தெரிவித்தள்ளார்.

ஒரு தரப்பு விடுதலை புலிகள் குற்றம் செய்ததென்பதற்காக இலங்கை அரசாங்கம் , இன படுகொலைகளை, கொடூரக் குற்றங்களைச் செய்வது என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.

இந்திய அரசாங்கம் ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம விடுக்கும் காலம் இன்னும் சிறு காலம் தான் .ஏன் என்றால் அழுகுரலிட்டு இறந்த நாற்பதாயிரம் போர் புரியாத சதாணர மக்கள் ஆன்மாக்கள் சாபம் சும்மா விடாது. MILLS OF GOD GRIND SLOW BUT SURE . இப்படி தான் உலகம் முழுவதும் ஆதரங்களை அடுக்கி கொண்டே போகும்.

இவ்வளவு சான்றுதல் பெறப்பட்ட பின்னரும் இந்திய அரசாங்கம் இல்லை நாங்கள் SAARC ஒப்பததின் படி நாங்கள் அப்படித்தானே ராணுவ பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கருதப்படுமேயானால் அதே சார்க் அமைப்பின் மற்றொரு அமைப்பு நாட்டின் பாகிஸ்தானுக்கும் பயிற்சி கொடுங்கள் என்று கோர தானே நாமும் வேண்டும் ?அது தானே இந்தியாவின் அமைப்பு சாரா நாட்டின் தன்மைக்கு அழகு !

ஹிட்லர் யூதர் இனத்தை அழித்ததை காட்டிலும் இந்த ராஜபக்சே & சகோதர்கள் செய்கை மிகவும் கொடியது . Callum macare (அசிரியர் No Fire Zone ) சொன்னதை உங்களின் கனிவான பார்வைக்கு வைக்கிறேன் .இவரின் VIDEO LINK நேரம் ஒதுக்கி பாருங்கள் http://nofirezone.org/trailer/

" இந்த நூற்று ஆண்டின் மிக மோசமான படுகொலை செய்த ராஜபக்சே & சகோதர்கள் இப்போது அதிகாரத்தில் . இவர்கள் அவர்கள் நாட்டின் சிங்கள தலைமை நீதிபதி , சிங்கள பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இன்னும் தொடர்ச்சியாக வட மாநில வாழ் தமிழ் மக்களை வருத்தி கொண்டு இருகிறார்கள் ,"

காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு வரலாற்று சம்பவத்தை இந்த படமும் நினவு படுத்தட்டும் . திரு.ராஜீவ் காந்தி அவர்களை முதலில் ஒழிக்க விரும்பியது IPKF வருகை விரும்பாத இலங்கை அரசாங்கம் தானே .,திரு ராஜீவை துப்பாக்கி மறுமுணையால் கொல்ல முயன்ற இந்த சிங்கள வீரர் என்ன தண்டணை பெற்றார் ? எங்கள் வரிபணத்தை 500 கோடி ருபாய் இலங்கை அரசுக்கு வாரி இழைத்து கணக்கு ஏதும் கேட்க மறந்து போனது போல தானா இதுவும் ?

அடுத்த முறை யார் மத்திய சர்காரில் இடம் பெற்றாலும் வெளிநாட்டு துறையை தமிழ்கள் தயவு செய்து கேட்டு வாங்கி விடுங்கள் .அதன் பின்னர் தமிழர்கள் என்றால் என்ன என்று ஜனநாயகமுறையில் இந்த இனபடுகொலை செய்த இலங்கை அரசுக்கு காட்டுவோம்.

நன்றி - முகநூல்/கருத்துக்களம் 

Comments