எழுத்துப்பிழையா? இனி வந்தாச்சு ‘ஸ்மார்ட் பேனா’


"ஸ்மார்ட் பேனா"           ‘ ரோட்டில் பணம் கிடக்கிறது ’ என்பதற்கு ‘ரோட்டில் பிணம் கிடக்கிறது’ என்று எழுதுவோர் பலர். இதுபோல் கவனக்குறைவாக எழுதுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்பது எழுதும் போது யாரும் உணர்வதில்லை. ஆனால் பணத்திற்கும் பிணத்திற்கும் எவ்வளவு வேறுபாடு என்பது படிக்கும் போது தான் தெரியும்.

            இவ்வாறு இலக்கணப் பிழை மற்றும் எழுத்துப் பிழையுடன் நாம் எழுதும் பட்சத்தில் இதுகுறித்து அதிர்வுகள் மூலம் நமக்கு தகவல் தெரிவிக்கும் ஸ்மார்ட் பேனாவை ஜெர்மன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பேனாவில் எழுதும் போது ஏதாவது பிழையுடன் எழுதினால் ஒருவித அதிர்வுடன் உங்கள் தவறை சுட்டிக்காட்டி ,தவறை திருத்திக்கொள்ள சொல்கிறதாம்.

           இளைய தலைமுறையினர் பிழையின்றி எழுதுவது எப்படி என்பதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேனா, தற்போதைய நிலையில் அனைத்து வயதினருக்கும் உதவிகரமாக இருக்கும் என்று லெர்ன்ஸ்டிப்ட் என்ற ஜெர்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

          தற்போது ஆங்கில மொழிக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள இப்பேனா மற்ற மொழிகளிலும் உருவாக்கப்படுமாம்.எந்த மொழிக்கு வருகிறதோ இல்லையோ, தமிழ் மொழிக்கு கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும்.அப்போது தான் தமிழ் மொழி இனியும் சாகாமல் பிழைக்கும்.

Comments