எது இன்றைய முக்கிய தேவை???

இன்று பலருக்கு கார்ல் மார்க்ஸ்க்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதவ்ர்கள் என்பதாகவே எண்ணுகிறார்கள்..அம்பேத்கர் மற்றும் பெரியார் சொல்வது என்னவெனில் பாட்டாளிவர்க்க சமத்துவம், சுதந்திரம் உலகம் முழுமைக்குமான தேவை, அதை எந்த பகுத்தறிவாளனும் மறுக்க மாட்டான் .அதேவேளையில் இந்தியாவில்  பாட்டாளி வர்க்க அடக்குமுறை இல்லையென்றும் சொல்லவில்லை ஆனால் அதை விட உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு இங்கே சமூக இழிவு கட்டவிழ்க்கப்பட்டுள்ளதே …அதை களையாமல் பாட்டாளி வர்க்க போராட்டத்தை முன்னெடுப்பது எங்ஙனம் நியாயப்படும்?
உழைக்கும் மக்களை சுரண்டும் முதலாளித்துவ அரசியலில் இந்தியா சிக்குண்டு முழிப்பதை சுயமறியாதைக்காரர்கள் யாரும் மறுக்கவில்லை, அதே சமயம் இந்தியாவிம் முக்கிய தேவையான சமூக விடுதலைக்கு இடதுசாரிகள் என்ன செய்கிறோம்  என்றும் கவனிக்க வேண்டும் .இந்தியாவில் அம்பேத்கரும் பெரியாரும் வடக்கிலும் தெற்க்கிலுமாக  தங்கள் போராட்டத்தை தொடங்கினார்கள் எனில் இந்த இந்து மத வர்ணாசிரம வக்கிரமங்களை கலையவே அன்றி ஒரு போதும் முதலாளித்துவ அரசை அங்கீகரிக்க அல்ல.. அது அவர்களின் முன்னெடுப்பு  அன்றி இன்று சமூகத்தின் மீது பற்று கொண்ட சமூக பார்வை கொண்ட ஒவ்வொறுவரின் கடமையும்  அதுவாகத்தானே இருக்க முடியும்?
பொது உடைமை அரசியலுக்கு மேலாக உலகில் எதுவுமில்லை’— என்பதை மறுக்க முடியாது.அதே வேளையில் நாம் தேவை அவசியம் என்ற இரண்டிற்கும் உள்ள வித்டியாசத்தை உணர வெண்டும். .பொது உடமை அரசியல் உலக தேவை ,ஆனால் சமூக இழிவை களைவது ஒவ்வொரு இந்தியனின் அவசியம், தேவையை புறக்கணித்துவிட்டு இழிவை மட்டும் பாருஙகள் என்பதாக இதை எடுத்துக்கொள்ள கூடாது.. எது முதலில் கையிலெடுக்கப்பட வேண்டும் என்பதே ந்ம் முன் இருக்கும் கேள்வி,அதற்கு விடை கண்டோமெனில் இரண்டிலும் வெற்றி கிடைக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியது இல்லை.
இந்த சமூக விடுதலையை எப்படி பெறுவது எனபது இன்றும் யாருக்கும் புலப்படாத ஒன்றாகவே உள்ளது,நமக்கு முன்னோடியாக இருந்து தம் வழிமுறைகளை அண்ணலும் ,ஐயாவும் சொல்லி ,பேசி அதற்க்காகவே வாழ்ந்து வரலாற்றிலும் வாழ்கிறார்கள். அந்த முன்னவர்கள் சொல்லிய ,காட்டிய வழிமுறைகளை கொண்டு நாம் என்ன செய்கிறோம் என்றால் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல முடிகிறது..அப்படியானால் நாம் எந்த போராட்டங்களும் செய்யவில்லையெனில் அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களினால் சமூக விடுதலை கிடைத்து விட்டது என்று முடிவுக்கு வரலாமா?
அன்றைய காலக்கட்ட்த்தை விட இன்று தானே சாதிவெறியர்களின் அட்டூழியங்கள் அதிகமாக அறங்கேறுகிறது, உத்தப்புரம்,மேலவலவு,இரட்டை குவளை முறை இன்னும் தாம்ரபரணி ஆற்றில் துணி வெளுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகமான வண்ணார் இனம் தீண்டபடாதவர்களாக மட்டும் அல்ல,காணப்படாதவர்களாகவே இருக்கிறார்களே அவர்களுக்கு யார் போராடுவது ? சாதியை உருவாக்கிய மனுக்கள் வேண்டுமானால் இன்று தாங்கள் தஙகள் வேலையை மட்டுமே கவனித்து அரசின் உயர் பதவிகளை தக்க வைத்து கொண்டு இருக்கலாம் ஆனால் அவர்களால் உருவாக்கபட்ட வர்ணத்தில் சற்று மதிப்பு மிக்க சாதி என்று சொல்லப்பட்ட சாதி இந்துக்கள் தான் இன்றும் அதை விடாமல் இது தான் தர்மம் என்கிறார்கள் அவர்களை எப்படி வர்க்க போராட்டத்துக்கு வரவழைக்க முடியும் ? அவர்கள் சாதியை மனதில் கொண்டு பாட்டாளி வர்க்க விடுதலை என்று பேசுவது எப்படி ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்?
இங்கு தெளிவு பட வேண்டிய விசயம் என்னவெனில், உலகலாவிய அளவில் நாம் முன்னெடுக்கும் பொதுவுடைமை அரசியலுக்கு முன்னோடியாக சமூக விடுதலை போராட்டத்தை கையிலெடுக்க வேண்டிய உழைக்கும் வர்க்கம் சாதி என்ற சிறு வட்டத்துக்குள் சிக்குண்டு இருப்பதை எடுத்துச்சொல்லி அது பார்ப்பனீயர்கள் தங்களின் பிளைப்பு வாதத்துக்காக உருவாக்கிய சதி தான் இந்த சாதி, நாம் அடைய வேண்டிய இலக்கு பெரிது அதுக்கு இது தடையாக ஒருபோது இருக்க கூடாது என்று சொல்ல வேண்டியது ஒவ்வொறு மார்க்க்சிய வாதிகளின் கடமையாக இருக்க முடியும்.அப்படி அனைவரும் சாதியை மறந்து சமூகம் சமத்துவம் அடையும் போது ஒன்றுப்பட்ட உழைக்கும் வர்க்கம் ஒரு ஒப்பற்ற வடிவம் பெரும் ,அந்த இலக்கை நோக்கித்தான் இன்றைய மார்க்க்சிய லெனினிய சுயமரியாத இயக்க தோழர்கள் இணைந்து செயல் பட வேண்டும்,அதுவே இன்றைய  ஒவ்வொறு இந்தியனின் தேவையாகும்.

நன்றி : தோழர் ந. தீபக்குமார்
படங்கள் : கூகுள் வலைதளம் 

Comments