தலையில் வால் முளைத்த மனிதர்


இப்படியும் ஒரு சாதனை

  
           

           ஜப்பானை சேர்ந்த பிரபல பேஷன் டிசைனர், கஜுரியோ வாட்நபே. புதுமையாக எதையாவது செய்து, சாதனை புத்தகங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்பது, இவரது நீண்ட நாள் விருப்பம். பேஷன் துறையில் இருப்பதால், தன் தலை முடியை வித்தியாசமாக அலங்காரம் செய்து, புதுமை படைக்க முடிவு செய்தார். 
             

             தலையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள முடியை, "ஷேவ்’ செய்தார். உச்சியில் மட்டும், முடியை வளர்க்க துவங்கினார். 15 ஆண்டுகள், இதற்காக கடும் முயற்சி மேற்கொண்டார். இப்போது, அவரது முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. 


            தலையின் நடுப்பகுதியில் மட்டும், 3 அடி, 8 அங்குல அளவுக்கு நீண்ட முடியை வளர்த்துள்ளார். தலைமுடியை தூக்கி நிறுத்துவதற்காக, ஸ்பிரே, ஜெல் போன்றவற்றை பயன்படுத்துகிறார். திடீரென இவரைப் பார்த்தால், தலையில் வால் முளைத்த மனிதர் போலவே இருக்கிறது. 
இதுவரை, இந்த அளவுக்கு தலையின் நடுப்பகுதியில் உயரமான முடியை வளர்த்து, அதை, யாரும் தூக்கி நிறுத்தியது இல்லையாம். 


        இதனால், இவரது பெயர், சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து, கஜுரியோ கூறுகையில், "விருந்து, முக்கியமான விழாக்கள் போன்றவற்றுக்கு செல்லும் போது மட்டுமே, முடியை, இப்படி தூக்கி நிறுத்துவேன். மற்ற நேரங்களில், சாதாரணமாக, கீழே விட்டு விடுவேன்…’ என்கிறார்.

நன்றி
தினமலர்

Comments