இளைஞர்களை சுண்டியிழுக்கும் சிக்ஸ் பேக்,உடலுக்கு நல்லதா? கெட்டதா?

இளைஞர்களை சுண்டியிழுக்கும் சிக்ஸ் பேக்,உடலுக்கு நல்லதா? கெட்டதா?

இன்றைய இளைஞிகள் அழகு நிலையங்களை நாடிச் செல்வதை போல, இளைஞர்கள் நாடிச்செல்வது உடற்பயிற்சி நிலையங்களை.  
முறையாக பயிற்சி பெறாத உடற்பயிற்சியாளர்களை நம்பி தம் உடலை கெடுத்துக்கொள்ளும் இளைஞர்களே..! சிக்ஸ் பேக் என்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கேட்டால்
 சிக்ஸ் பேக் ஒரு நல்ல விஷயம் இல்லை. ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளிக்கோ, மீனவருக்கோ, விவசாயிக்கோ இயற்கையாக வரும் சிக்ஸ் பேக்கும் நாம் செயற்கையா உருவாக்கிக்குற சிக்ஸ் பேக்குக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.உடம்புல உள்ள எல்லாச் சக்தியையும் பணயம் வைக்குற ஒருத்தர்தான் சிக்ஸ் பேக்குக்கு ஆசைப்படலாம்.

சிக்ஸ் பேக்

   பொதுவாக நம் உடலின் வயிற்றின் அடிப்பகுதி, தோள்பட்டை, கை, தொடை, இடுப்பு பகுதிகளில் கொழுப்பு அதிக அளவு தேங்கியிருக்கும். அடிவயிற்றில் ட்ரான்ஸ்வெர்ஸ் தசை மற்றும் ரெக்டஸ் தசை இருக்கும். இவை, கொழுப்பு முற்றிலும் நீக்கப்பட்ட பிறகு, ஆறு அடுக்குகளாகத் தாமே பிரியும். இதுதான் சிக்ஸ் பேக் என்று சொல்லப்படுகிறது.
         ''ஆண்டாண்டு காலமாக உடற்பயிற்சியில் உள்ள ஓர் அங்கம்தான் சிக்ஸ் பேக். ராணுவத்தில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர்கள், மற்றும் சினிமா நட்சத்திரங்களும் 'சிக்ஸ் பேக்வைத்திருப்பார்கள்'' ஆனால், அதற்கெனச் சில வரையறைகள் இருக்கின்றன.
         
''16 வயதினருக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும்தான் சிக்ஸ் பேக் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதைவிடக் குறைவான வயதுடையவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஏனெனில் முதுகுத் தண்டு வளர்ச்சி முழுமையாகப் பாதிக்கப்படும். முதுகு வலி இருப்பவர்கள், ரத்த சோகை உள்ளவர்கள் நிச்சயம் செய்யவே கூடாது'' என்கின்றனர் மருத்துவர்கள்
சிக்ஸ் பேக் செய்பவர்கள் புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வதால், கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. அதிக அளவு உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் வெப்பம் அதிகரிக்கும். மாவுச்சத்து, பால் பொருட்களைத் தவிர்ப்பதால், உணவின் விகிதாச்சாரம் மாறுபட்டு, மயக்க நிலைக்குத் தள்ளப்படலாம்.
      மேலும், தலை முடி உதிர்த்தல், மலச்சிக்கல் பிரச்னைகளும் ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிக்ஸ் பேக் என்பதை போட்டிகளில் கலந்துகொள்பவர்களோ, ராணுவத்தினரோ மேற்கொள்வது உண்டு. ஆனால் அழகுக்காகச் செய்பவர்கள், பாதியிலேயே நிறுத்துபவர்கள், நிச்சயம் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
 சர்க்கரை, தண்ணீர், உப்பு ஆகிய மூன்றையும் நீக்கிவிட்டால் உயிர் வாழ்வது கடினம்தான். அதிலும் புரதம், மாவுச்சத்து இல்லாமல், கடும் உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் தசை நார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். மனிதனுக்கு வலிமையான தசைநார்களே தேவை. உடல் வலி, காயம் ஏற்படுவதைத் தடுக்கவும் முதுகுவலி வராமல் காக்கவும் தசை நார்கள் பயன்படுகின்றன. ஆனால், சிக்ஸ் பேக் வைப்பதால் தேவை இல்லாத வலிகள், பிரச்னைகள்தான் அதிகம்.
      நம் உடலுக்கு ஏற்ற வகையில் இல்லாமல், அதிக அளவு எடை தூக்குவதால் கால்கள், இடுப்புகளில் உள்ள தசைகளில் வலி ஏற்படும். தொடர்ந்து இதுபோன்று செய்பவர்களுக்கு இந்த வலி நிரந்தரமாகிவிடும். அதேபோல் தசைநார் வழியாக ரத்தம் செல்லாவிடில், இதயத்துடிப்பு குறைந்து மயக்க நிலை ஏற்படலாம்.
       
அழகுக்கு ஆசைப்பட்டுத்தான் சிக்ஸ் பேக் மாயையில் இளைஞர்கள் விழுகிறார்கள். ஆதலால் வியாபார நோக்குடன் விளம்பரம் செய்யும் உடற்பயிற்சி மையங்களை நம்பி தம் பணத்தையும்,உடல்நலத்தையும் இழக்கின்றனர். ஆனால், நிரந்தர அழகுக்கு ஒருவர் முறையாக உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்குள் வைத்திருத்தலே முக்கியம். சிக்ஸ் பேக் அழகு என்பது தற்காலிகமானதே. நீடித்தது அல்ல. தவிர, அழகைவிட ஆரோக்கியமே முக்கியம் என்பதையும் இளைஞர்கள் உணர வேண்டும்.

Comments