வேஸ்ட்டையும் வேஸ்ட் பண்ணாதீங்க...! • பழைய நைலான் சாக்ஸ்களைப் பாத்திரம் தேய்க்க உபயோகித்தால் பாத்திரங்கள் கீறல் விழாமல் இருப்பதோடு பளிச்சென்று இருக்கும். அதுபோல் வாசல் தட்டும் துடைப்பம் கைகளை குத்தாமல் இருக்க பழைய சாக்ஸ்களை துடைப்பத்தில் போட்டு ஒரு ரப்பர் பேண்டை போட்டு வைத்து பயன்படுத்தலாம்.
 • இரப்பர் செருப்பு அறுந்து விட்டால் தூக்கி வீசி விட வேண்டாம். ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாக வெட்டி கிரைண்டரின் பாதத்திற்கு அடியில் வைத்து விட்டால் மாவு அரைக்கும் போது கிரைண்டர் அதிர்வினால் நகராமல் இருக்கும். பாத்திரம் தேய்க்க வாங்கும் லிக்குவிட் சோப் பிளாஸ்டிக் கண்டெய்னரை (வாய்ப்பக்கம் ஸ்ட்ராவுடன் தடியது) நன்கு சுத்தப்படுத்தி காய வைத்து எண்ணெய் நிரப்பி பூஜை அறையின் அலமாரியில்  வைத்துக்கொண்டால் விளக்குகளுக்கு எண்ணெய் விடும்போது கிழே எண்ணெய் சிந்தி பிசுபிசுக்காது. 
 • பழைய டைரியின் மேல் அட்டையை வட்டவடிவமாக கட் செய்து வைத்துக்கொண்டால் சூடான பாத்திரங்கள் வைக்க டேபிள்மேட் ஆக பயன்படுத்தி கொள்ளலாம்.
 • உங்களின் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டது என்றால் அதை தூக்கி எறிந்து விடாமல் பழைய டூத் ப்ரெஷ்ஷை எரித்து ஒழுகும் ஒட்டை மீது ஊற்றினால் ஒட்டை விரைவில் அடைபடும். 
 • வாசனை சோப்புகளைச் சுற்றி வரும் அட்டையை கண்போன்ற வடிவத்தில் வெட்டி டெலிபோன் உள்பாகத்தில் செலேடேப் வைத்து ஒட்டி விட்டால் டெலிபோன் கமகமவென்று மணக்கும் வாரத்திற்கு ஒரு முறை மாற்றி விட்டால் புதிதாக வைத்துக் கொள்ளலாம்.
 • டேட் எக்ஸ்பயரி ஆன மாத்திரைகளை பொடி செய்து தண்ணீரில் கலந்து செடி கொடிகளுக்கு தெளித்து விடலாம். செடிகள் பூச்சி வராமல் செழித்து வளரும். 
 • சோபா மேஜைகளை இடம் மாற்றும் முன் அவற்றின் கால்களில் பழைய சாக்ஸீகளை நுழைத்து விடவும் இப்போது இஷ்டப்படி இழுக்கலாம். கீறல் விழாது. தரையும் பொருட்களும் பாழாகாது. வீடுகட்டும் போது மீந்த டைல்ஸ்களை சமையலறையில் எண்ணெய் நெய் ஊறுகாய் ஜாடிகளுக்கு அடியில் வைக்கப் பயன்படுத்தலாம்.
 • பழைய ஃபீடிங் பாட்டில்களை சமையல் அறையில் திராவகங்களின் அளவு பாக்க பயன்படுத்தலாம். உபயோகித்த குக்கரில் வைக்கும் அலுமினியப் பாத்திரங்களைக் கடையில் கொடுத்தால் அழகாகத்துளைப் போட்டு கொடுப்பார்கள், அதனை காய்கறி வடிகட்ட பயன்படுத்தலாம்.
 • பெருங்காயம் பவுடர் முடிந்ததும் அதன் டப்பாக்களை பத்திரப்படுத்தி அதில் சோப் பவுடர் போட்டு சமையலறையில் வைத்துக்கொண்டால் சாப்பிட்ட தட்டுகள் மற்றும் சில பொருட்களை சுத்தப்படுத்த சுலபமாக இருக்கும். சோப் பவுடரும் வீணாகுவதில்லை.
 • இன்ஜெக்ஷன் போடும் சிரிஞ்ச் இருந்தால் பேனாவிற்கு இங்க் ஃபில்லராக பயன்படுத்தலாம். அதோடு அதில் தேங்காய் எண்ணெய் எடுத்து சைக்கிள்களுக்கு எண்ணெய் விட்டுக் கொள்ளவும் உதவும்..
 • காலியான டூத் பேஸ்ட் மூடிகளின் அடிப்பக்கம் இலேசாக பெவிக்கால் ஒட்டி ஜன்னல் ஒரத்தில் அல்லது சுவரோத்தில் பொருத்தி விட்டு அதன் மீது அதிக எடை இல்லாத பொருட்களை போட்டு வைத்து உபயோகப்படுத்தலாம்.பூஜை அறையில் படங்களின் மேல் பழைய ரெனால்ட்ஸ் பேனா முடிகளை சுவரில் கம்பு போல் வைத்து வாய்ப் பகுதி மேல் நோக்கி இருக்கும்படி வைத்து செலேடேப் போட்டு ஒட்டி வைக்க ஒவ்வொரு படத்திற்க்கும் கீழே வண்ண மலர்கள் தாங்கிய கம்புகள் பார்க்க அழகாக இருக்கும்.
 • எக்ஸாஸ்டு ஃபேன் சுவரில் வட்டமாக ஃபேன் இல்லை என்றால் மாவு சலிக்கும் சல்லடையை அங்கு பொருத்தி விட்டால் பூச்சி பொட்டு எலி எதுவும் உள்ளே வராது.   


நன்றி
தினகரன்

Comments