தீட்டுள்ள பெண்கள் ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடக்கூடாது, உண்மையா?????

          தொழில் நுட்பம் பெருகாத ஆதிகாலத்தில் உடல் வலுவாக இருந்த காரணத்தாலேயே ஆணின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது.  ஆனாலும், பெண் அவனைவிட நுட்பமனகளாக இருந்தாள்.  ஆணைத் தன அழகால் அலைக்கழித்தாள்.  ஒவ்வொரு கணமும் தன் எண்ணத்தை பெண் ஆக்கிரமிப்பதை ஆண் கவனித்தான்.  உடல் ரீதியாக பலம் கொண்டவனாக இருந்த போதிலும், மனரீதியாக பெண்ணிடம் அடிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அவனை ஆட்டிப் படைத்தது.  அதனாலேயே பெண்களை அடக்கி வைக்க அவன் முற்பட்டான்.

          எங்கே சற்று சுதந்திரம் கொடுத்தால், அதிகாரத்தை பெண் எடுத்துக் கொள்வாளோ என்று அரசர்கள் மட்டுமல்ல, மதகுருமார்களும் கலங்கினார்கள்.  ஆண்களே வாரிசாக வேண்டும் என்ற விதி, ஆட்சிகளை விட்டுக் கொடுக்காமல் இருக்க அடிகோலியது.

          மதகுருமார்களும் பெண்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.  அதில் ஒன்று தான் இந்த தீட்டு.  மாதம் ஒரு முறை பெண் அசுத்தமாகிறாள் என்று சொல்பவர்களிடம் இதைத்தான் சொல்ல விரும்புகிறேன்.

          நீங்கள் வசதியாக ஒரு விஷயத்தை மறந்து விடுகிறீர்கள்.  நீங்கள் உங்கள் அன்னையின்  கருவில் இருந்த பத்து மாதங்களும் அவளுடைய அசுத்தங்கள்  வெளியேறவில்லை.  அப்படியானால், அந்த அசுதங்களால்தானே நீங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டீர்கள்?  உங்கள் உடலின் ஒவ்வொரு துளி ரத்தமும், நரம்பும் தசையும், எழும்பும் அந்த அசுத்தத்தால் தானே தயாராகியிருக்க முடியும்?

          ஒரு பெண்ணை அசுத்தம் என்றால், அவளிடமிருந்து உருவானவர்கள் அவளை காட்டிலும் அசுத்தமானவர்களாகத்தானே இருக்க முடியும்? அவளுக்கு மாதம் ஒரு முறை தீட்டு என்றால் உங்களுக்கு தினம் தினம் தீட்டு தானே?

          எனவே இந்த நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு பெண்களை இழிவு படுத்த முனையாதீர்கள்.

நன்றி :  சத்குரு ஜக்கி வாசுதேவ் - மூன்றாவது கோணம்  புத்தகத்திலிருந்து

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்