இரவில் சென்றாலும் அரவில் செல்லாதே!

இங்கே அரவு என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது ராகு காலத்தை என்று அறிந்தேன்.

பகலில் போகாமல் இருப்பதற்கு ராகு காலம், இரவில் போகாமல் இருப்பதற்கு இருட்டு என்று காரணங்கள் சொல்ல, இது முழுச் சோம்பேறிகளின் மூளையில் விளைந்த வாக்கியம்.

ஒரு நாளுக்கு 24 மணி நேரங்கள் என்று வகுத்ததே மனிதன்தான்.  வாரம் என்றும், 7 கிழமைகள் என்றும் கூட இயற்கை எந்த அளவுகோலும் அமைத்துத் தரவில்லை. எல்லாமே மனிதனின் திட்டமிடல்தான். இதில் ஒவ்வொரு கிழமைக்கும் இது நல்ல நேரம். இது கேட்ட நேரம் என்று எந்த நியதியும் அமைய வாய்ப்பேயில்லை.

ஒரு நாளை இருபத்து நான்கு மணி நேரமாக பிரிப்பதற்கு முன்பும் மனிதன் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறான். அவனைப் பொறுத்தவரை பகல் - இரவு என்று இரண்டே வித நேரம் தான்.

கடிகாரம் கண்டுபிடிக்கப்படும் முன் நேரம் இவ்வளவு பகுதிகளாக அவனால் அறியப்படவில்லை.

மனிதன் வேறு வசதிகளுக்காக நாளின் நேரத்தை பிரித்தான்.  மனிதன் பிரித்த நேரத்தை நல்ல நேரம் கேட்ட நேரம் என்றெல்லாம் இயற்கை ஏன் பார்க்கப் போகிறது?

அரசனாக இருந்தாலும் தன்னிடம் வந்து உத்தரவு வாங்கி செல்ல வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட சமூகம் எழுதி வைத்த விதிகள் தான் ராகு காலம், எம கண்டம், நல்ல நேரம், கேட்ட நேரம் எல்லாம். மற்ற படி வேலையைத் தள்ளிப்போட நினைப்பவர்களுக்கு இது சாதகமாகி விட்டது.

ஒவ்வொரு நிமிடமும் நல்ல நிமிடமே.

பயன்படுத்தாமல் தவற விடும் நேரம்தான் கெட்ட நேரம்.


நன்றி : சத்குரு ஜாக்கி வாசுதேவ் - மூன்றாவது கோணம் புத்தகத்திலிருந்து 

Comments

  1. பகிர்வுக்கு நன்றி! ஆனால் கருத்தில் உடன் பாடு இல்லை! கோள்களின் இயக்கத்தை கொண்டு ஜோதிட சாஸ்திரம் வகுக்கப்பட்டிருக்கிறது! இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வகுத்தது அல்ல!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவரின் கருத்துக்கும் இங்கே மதிப்பு அளிக்கப்படுகிறது. அது அவரின் கருத்து அதில் எனக்கு உடன்பாடு உண்டு. தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பது உங்களின் தனிப்பட்ட கருத்து..... அந்த கருத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்:-)

      Delete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்