அறிஞர்களின் பொன்மொழிகள்
Ø
அற்புதங்களை
நடத்திக்காட்டக் கூடிய சக்தி, நம்பிக்கைக்கு உண்டு – தூசிடைடஸ்
Ø
குறிக்கோள்
இல்லாதவர்களை விட குறிக்கோள் உள்ளவர்கள் இரண்டு மடங்கு சம்பாதிக்கிறார்கள் – யங்
Ø
காணும்
கனவை நிஜமாக்கி காட்டுபவர்கள் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை – மெகின்ஸி
Ø
எல்லோருமே
வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர் – சிசரோ
Ø
உறுதியான
மனம் கொண்டவர்களே உன்னதமான எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்கின்றனர் – கார்லைல்
Ø
எதிர்ப்பும்
தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேற முடியும் – மேட்டர்லிங்
Ø
உழைக்காமல்
வெற்றி பெற முயல்வது, வயலில் விதைக்காமல் அறுவடைக்கு செல்வதைப் போன்றது – எமர்சன்
Ø
வாழ்க்கையில்
வெற்றி பெற ஆசைபடுபவர் முதலில் கவலையை ஒதுக்கி வைக்க வேண்டும் – மில்டன்
Ø
நீங்கள்
வாழ்க்கையை விரும்புகிறீர்களா, அப்படியானால் நேரத்தை வீணாக்காதீர்கள் – வோல்ட்டன்
Ø
நிதானமாய்
சிந்தித்து உறுதியோடு செயல் படுகிறவர்கள் ஒரு போதும் தோல்வி அடைவதில்லை – மகின்டோஷ்
Ø
நாம்
நினைத்தால் வளமான வாழ்க்கையை நம்மால் நிச்சயம் உருவாக்கிக் கொள்ள முடியும் – ஜார்ஜ் எலியட்
Ø
நிறைய
சவால்களை நம்பிக்கையாய் எதிர்கொண்டு போராடுபவர்கள் நிறைய ஜெயிக்கின்றனர் - ஆக்டன்
ஆர்மா
Ø
நம்பிக்கை
மனோபாவத்துடன் என்ன கட்டளையிட்டாலும் அதை ஆழ்மனம் நடத்திக்காட்டும் – வான்ஜி மார்மென்
Ø
நிரந்தர
தோல்வி, நிரந்தர துக்கம், நிரந்தர சோகம் என்று எதுவும் கிடையாது – ஒயிட்
Ø
வியக்கத்தக்க
அளவிலான ஆற்றல் உங்களுக்குள் மறைந்து கிடக்கிறது – கிளாட்ஸ்டன்
Ø
அரைகுறை
மனதுடன் எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம், அர்பணிப்பு உணர்வுடன் செய்யுங்கள் - செஸில்
Ø
விருப்பத்தோடு
செய்கிற வேலையைத் தான் விரைவாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும் – ரஹேல்
Ø
உங்களுக்குள்
உள்ள ஆற்றலை கூர்மைப்படுத்தினால் தான் உலகையே வெல்ல முடியும் - சிம்மன்ஸ்
Ø
எதுவொன்று
இருப்பதைவிட வித்தியாசமாக இருக்கிறதோ அதுவே முதலில் கவனிக்கப்படும் – ஸ்டாடர்
Ø
உண்மையான
உழைப்பிற்கு எவருமே முதலிடம் தராமல் இருந்ததில்லை – புளுடார்க்
2 Comments
arumai...!
ReplyDeleteஅருமையான தொகுப்பு...
ReplyDeleteஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்