எழுத்தும்.. வலிமையையும்..வலை பதிவுகளையும் , பல முன்னணி பதிவர்களின் வலைபூவயுமே வாசித்துக்கொண்டிருக்கும் எனக்கு கடந்த இரண்டு வாரங்களாக நாளிதழில்  வார இறுதியில் வரும் இலவச இணைப்பு புத்தகத்தில் கவனம் சென்றது.கடந்த வார புத்தகத்தின் பின் புறம் இருந்த ஒரு ஆங்கில திரைப்பட முன்னோட்டதிற்காகவே அந்த புத்தகத்தை சற்று புரட்டிவிட்டு பின்பு இருந்த இடத்திலேயே வைத்துவிட்டேன் ஆனால் இவ்வாரம் வந்திருக்கும் புத்தகத்தை படிக்க படிக்க ஆர்வமாக இருந்தது ராசிபலன் முதல்கொண்டு இறுதி பக்கத்தின்  இறுதிவரி வரை ஒரே மூச்சில் படித்துமுடித்தேன் இடை இடையே இது மகளிர் தின சிறப்பு இதழோ என்ற சந்தேகமும் வந்தவண்ணம்  இருந்தன . .அட்டையிலேயே ஆரம்பமாகிறது பெண்களின் ஆதிக்கம் அதன் பின் பக்கத்திற்கு பக்கம் பெண்கள் தான் அந்த பக்கத்தில் இருக்கும் கட்டுரைக்கும் பெண்ணுக்கும் சம்மந்தமே இல்லாவிடினும் துணுக்காகவோ துண்டு செய்தியாகவோ கண்களில் பட்டு விடுகிறது ஏதேனும் ஒரு பிரபல பெண்ணை பாராட்டும் ஏதேனும் ஒரு செய்தி .

எல்லாம் சரியே ஆனால் ஒரு கட்டுரையில் ஒரு நடிகையின் வளர்ச்சியை பற்றி எழுத ஆரம்பிக்கையில் எழுத்தாளர் தன் நிலையை சற்று உணர தவறி விட்டாரோ என்ற பதற்றம் அதிகரிக்கிறது ..

நடிப்பு என்பது ஒரு திறமை அதாவது கலை சார்ந்த விஷயம் . கலையில் வளர்ந்து வருபவர்களை அவர்களின் வளர்ச்சியை பிறருடன் ஒப்பிட்டு பார்த்தல் என்பது கடினம்தான் இருப்பினும் அவரின் வளர்ச்சியை எப்படியாவது விமர்சித்தே தீரவேண்டுமென பொருளாதார பின்னணியில்  இருந்து அவரை விமர்சிப்பது எந்த மாதிரியானதொரு கண்ணோட்டம் என தெரியவில்லை.

எந்த ஆயுதத்தையும் விட எழுதுகோலின் முனை கூர்மையானது .
எண்ணங்களை சுத்தியலாக்கி எழுதுகோலை உளியாக்கி ஆக்கப்பூர்வமான  அழகான சிற்பங்கலையே நாம் செதுக்கவேண்டும் எக்காரணத்திற்காகவும் நாம் அதை சிதைப்பதாகது .

சிரமம் பாராமல் கருத்துக்களை பதிவிடுங்கள்.. என்னை நானே செதுக்கிக்கொள்ள அவை உதவும்..

நன்றி . .

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்