இந்தியா ஏழை நாடா?

இந்தியாவில், அதிகம் ஊதியம் பெறும் நபர்களின் பட்டியலை “பிசினஸ் இந்தியா நாளேடு“ வெளியிட்டுள்ளது. முதல் பத்து நபர்களின் பட்டியலை மட்டும் கீழே தருகிறேன். (இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படும் ஊதியம் ஆண்டுதோறும் வரும் பங்குத்தொகை மற்றும் போனசையும் சேர்த்து )

1) 
அனில் அம்பானி 104 கோடிகள்
(
அனில் திருபாய் அம்பானி நிறுவனம்)

2) 
கலாநிதி மாறன் 37 கோடிகள்
(
சன் டிவி குழுமம்)

3) 
மல்லிகா கலாநிதி 37 கோடிகள்
(
சன் டிவி குழுமம்)

4) 
பி.ஆர்.ராமசுப்ரமணிய ராசா 57 கோடிகள்
(
இந்தியா சிமென்ட்ஸ் மேலாண்மை இயக்குநர்)

5) 
நவீன் ஜின்டால் 48 கோடிகள்
(
இணை மேலாண் இயக்குநர்ஜின்டால் குழுமம்)

6) 
மல்வீந்தர் சிங் 23 கோடிகள்
(
ரான்பாக்சி மருந்து நிறுவன தலைவர் மற்றும்
மேலாண் இயக்குநர்)

7) 
சுனில் பாரதி மிட்டல் 20 கோடிகள்
(
ஏர் டெல் நிறுவன மேலாண் இயக்குநர்)

8) 
விவேக் ஜெயின் 20 கோடிகள்
(
ஐநாக்ஸ் குழும மேலாண் இயக்குநர்)

9) 
கவுதம் அடானி 20 கோடிகள்
(அடானி குழும தலைவர்)

10) 
பிரிஜ் மோகன் முன்ஜால் 19 கோடிகள்
(
ஹீரோ ஹோண்டா நிறுவன தலைவர்)
இப்பட்டியலில் அதிகம் ஊதியம் பெறும் 3134 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முதல் பத்தைத்தான் மேலே பார்த்தீர்கள். இப்பட்டியலில் கடைசியாக 3134வது இடத்தில் இருப்பவரின் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா ?
ரூபாய் 50 லட்சம்.

3134
வது இடத்தில் இருப்பவரே ஆண்டுக்கு 50 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள் என்றால் இவருக்கு மேலே இருப்பவர்கள் எவ்வளவு பெறுவார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.
இந்தப் பட்டியலை பார்த்து விட்டீர்களா ?
இந்தப் பட்டியலில் இருப்பவர்கள்தான், இந்திய அரசையும்இந்திய சட்டங்களையும்இந்திய நீதிமன்றங்களையும்அனைத்து மாநில அரசுகளையும்மாநில சட்டங்களையும், இந்தியா மற்றும் மாநிலங்களின் கொள்கைகளையும்இந்தியா மற்றும் மாநிலங்களின் பட்ஜெட்களையும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிரதமர்களையும்முதலமைச்சர்களையும்மத்திய மாநில அமைச்சர்களையும், ஐஏஎஸ்ஐபிஎஸ்ஐஎஃப்எஸ் போன்ற உயர் அதிகாரிகளையும்உண்மையில் நிர்வகிப்பவர்கள்.
இவர்கள்தான் அனைத்துக்கும் சூத்திரதாரிகள்.
இவர்களின் கையில் இருக்கும் நூலிலேதான் பிரதமர் உட்படஇந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் பொம்மைகளாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள்தான் பரப்பிரம்மம்.
இவர்கள்தான் கடவுள்.
இவர்களன்றிஇந்தியாவில் ஓர் அணுவும் அசையாது.
இவர்கள் இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் வெகு கீழேதான் இருப்பார்கள்
இந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மை மக்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா ?

கீழே உள்ள இந்தப் படங்களை பாருங்கள்
இப்போது உங்களுக்கு ஆத்திரம் வருகிறதா ?
ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும், இவ்வளவு பணம் மேலும் மேலும் சேர்வதற்கு காரணமாக இருந்து வழிவகை செய்து கொடுத்து, அவர்கள் ஆட்டுவித்தபடி ஆடிக்கொண்டிருக்கும், நம் அரசியல்வாதிகள் மஹாத்மாக்களா ?

நன்றி : தோழர் ந. தீபக்குமார்

Comments