நீங்கள் தமிழில் ‘ட்வீட்’ பண்ணனுமா?


நீங்கள் தமிழில் ‘ட்வீட்’ பண்ணனுமா?
     அவரவருக்கு அவரவர் தாய்மொழியில் பேசுவதும் எழுதுவதுமே எளிமையானது, சவுகரியமானது. மிகவும் எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும். கூகிள் தேடலிலும் கூட அவரவர் தாய் மொழியில் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்ததால் தான் பல மொழிகள் அதில் சரளமாக புழங்குகின்றன. தொடர்பு மொழி தாய் மொழியாக இருந்தால், பகிர்தல் எளிதாய் இருக்கும் என்பதே இதற்கு காரணம்.
      அந்த வகையில், பேஸ் புக்கிலும் தமிழ் மொழியிலான பகிர்தலை அதிகம் காணலாம்.தற்போது அந்த வசதி சமூக வலைதளமான டிவிட்டரிலும் வரப் போகிறதாம்.ஐரிஷ், தமிழ், கன்னடம், பெங்காலி என 16 மொழிகளில் மொழி பெயர்ப்பு மையத்தினை (டிரேன்ஸ்லேஷன் சென்டர்) வழங்க உள்ளது டிவிட்டர்தமிழ் மொழியில் டிவிட்டர் பக்கத்தினை வடிவமைக்கும் வாய்ப்பினை டிவிட்டர் உறுப்பிடருக்கே வழங்குகிறதாம் டிவிட்டர்
       (Translate.twitter.com) என்ற  வலையதளத்தில் நுழைந்தால் உங்களுக்கான வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வார்த்தைக்கு சரியான மொழிபெயர்ப்பை டைப் செய்து சமர்பிக்க வேண்டும். அதே வார்த்தைக்கு ஆயிரக்கணக்கான டிவிட்டர்வாசிகள் தாங்கள் மொழிபெயர்த்த வார்த்தைகளை டைப் செய்து சமர்ப்பிப்பார்கள். இப்படி வந்து சேர்ந்த ஒட்டுமொத்த வார்த்தைகளிலும், வாக்களிக்கும் முறையின் மூலம் சிறந்த வார்த்தைகள் தேர்வு செய்யப்படும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் டிவிட்டர் முகவரியில் ‘லாகின்’ செய்து வார்த்தைகளை சமர்ப்பித்து, தமிழில் பகிரலாம்.

Comments