சமர்21-ம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளை முழுங்கி விட்டு ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு மனிதக் கூட்டதில் முதல் இடத்திற்காக முண்டி அடித்து கொண்டிருக்கிறோம் . நம்மை யாரேனும் கவனிகின்றனரா  என்பதையும் கவனிக்க  மறந்து .

நவீன யுகமான இக்காலத்தில் நாம் பழகுவதெல்லாம் எந்திரத்துடனே    , நாம் காண்பெதெல்லாம் 3D  , தொடுவதெல்லாம் தொடு திரை  , கேட்பதெல்லாம் HD, கணினி போன்றே கைபேசியிலும் இணையம் இன்றியமையாததாகிவிட்டது .

கணினியோடு இணையம் இணைந்த பின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிவேகமாகி நில்லாமல் போய்கொண்டே இருக்கிறது. கருத்து பரிமாற்றத்தில் தொடங்கி கல்வி, கலை என அனைத்திற்கும் இணையம் மிகபெரும் உதவிகலைசெஇது வருகிறது. ஆக்கம் அதிகம் இருக்கும் இதுவே பலரின் அழிவிற்கு காரணாம் என்பதும் மறுக்கப்பட முடியாத ஒன்று.

பணம் படைத்த இருவர் தங்களிடம் உள்ள அதிகபடியான பணத்தை எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் சூதாடி, சூதாடி  சலித்து பின்  மனிதர்களை வைத்து விளையாட ஆரம்பிக்கின்றனர் . இது தான் சமர் திரைபடத்தின் கதை சுருக்கம்.

இம்மாதிரியான ஒரு வியூகத்தில் வந்து சிக்கி கொள்ளும் நாயகன் எவ்வாறெல்லாம் குழம்பி மண்டையை உடைத்துகொள்கிறார் பின் அந்த வியூகத்திலிருந்து எவ்வாறு வெளி வருகிறார்  என்பதை அக்மார்க்  தமிழ் சினிமா முத்திரைகளுடன் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர்

தமிழ் சினிமா என்றால் இப்படிதான் எடுக்கவேண்டும் என்கிற கோட்பாடு நல்ல ஒரு கதை காலத்தையும் கெடுத்துவிட்டது..

மொத்தத்தில் சமர் : வித்தியாசமான கண்ணோட்டதோடு கண்டிப்பாக பார்க்கேண்டிய படம்.

நன்றி .

Comments