மோனாலிஸாவின் மர்ம புன்னகைக்கு பின்னால் மருத்துவ இரகசியம்???

 
மோனாலிஸாவின் மர்மப் புன்னகைக்கான காரணத்தைக் கண்டறிய வரலாற்று அறிஞர்கள் திணறிக் கொண்டிருக்கையில், அப்புன்னகைக்கு மோனாலிஸாவின் தோலின் கீழுள்ள கொழுப்பமிலங்களே காரணம் என இத்தாலிய மருத்துவர் உரிமை கோரியுள்ளார்.

பலேர்மோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவரான விதோ பிரான்கோவே இவ்வாறு உரிமை கோரியுள்ளார்.

அளவுக்கதிகமான கொலஸ்ட்ரோல் காரணமாக தோலின் கீழ் கொழுப்பமிலங்கள் சேர்ந்ததால் மோனாலிஸாவின் வலது கண்ணின் கீழ் கொழுப்புக் கட்டியொன்று ஏற்பட்டிருப்பதற்கான சான்று அவரது ஓவியத்தில் காணப்படுவதாக விதோ தெரிவித்தார்.

மோனாலிஸாவின் புன்னகையின் மர்மத்துக்கு கலைக்கண்ணோட்டத்தை விட மருத்துவ ஆராய்ச்சியே விடை பகர்வதாக அவர் வலியுறுத்தினார்.

விதோ தனது ஆய்வின் முடிவுகளை புளோரன்ஸில் இடம்பெற்ற மருத்துவ மாநாட்டில் சமர்ப்பித்தபோதே மேற்படி தகவலைத் தெவித்தார்.

பிரபல ஓவியர் லியோனார்டோ டாவின்ஸியால் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் பெண் ஒருவரை மாதிரியாகப் பயன்படுத்தி இந்த ஓவியம் வரையப்பட்டது.

அப் பெண்ணிடமுள்ள மருத்துவக் குறைபாடுகளை ஓவியர் தன்னையறியாமல் ஓவியத்தில் பிரதிபலித்துள்ளதாக விதோ குறிப்பிட்டார்.நன்றி:  தகவல் வலைதளம்

Comments