வந்தாச்சு சூப்பர் பிளைட் …..!


        

சூப்பர்சானிக் விமானம் -எக்ஸ்-51  வேவ் ரைடர்

        அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும், பிரிட்டனின் லண்டன் 

நகருக்கும் இடையேயான தூரம், 5,570 கி.மீ., இந்த தூரத்தை விமானத்தில் 

கடப் பதற்கு, ஏழில் இருந்து, எட்டு மணி நேரம் ஆகும். மோசமான 

வானிலை ஏற்பட்டால், கூடுதல் நேரம் பிடிக்கும். ஆனால், நியூயார்க்கில் 

இருந்து, ஒரு மணி நேரத்துக்குள் லண்டனுக்கு செல்லும் வகையில், அதி 

நவீன விமானம் ஒன்று தயாராகி வருகிறது.

          
          அமெரிக்காவின் நாசா தயாரித்துள்ள, இந்த அதி நவீன 

சூப்பர்சானிக் விமானத்துக்கு, "எக்ஸ்-51 வேவ் ரைடர்' என 

பெயரிடப்பட்டுள்ளது. இது  மணிக்கு, 7,242 கி.மீ., வேகத்தில் செல்லும்

போர்களின் போது, குண்டுவீச்சுக்காக பயன்படுத்தப் படும், பி-52 ரக 

விமானத்தின், இறக்கைகள், இதில் பொருத்தப் பட்டுள்ளன. முழுக்க 

முழுக்க ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும், இந்த விமானத்தின் 

சோதனை ஓட்டம், அமெரிக்காவில் நடந்து வருகிறது. சோதனை வெற்றி 

பெறும் பட்சத்தில், நியூயார்க்கில் இருந்து லண் டனுக்கு, ஒரு மணி 

நேரத்துக்குள்ளேயே சென்று விடலாம்.

Comments

  1. நல்ல தகவலுக்கு நன்றி .ஒருநாள் இந்தியாவுக்கு நிச்சயம் வரும்

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்