விவசாயத்தை லாபகரமானதாக்க வேண்டுமா?      விவசாய உற்பத்தியைப் பெருக்க எத்தனையோ திட்டங்கள் வந்தும்,இதை லாபகரமானதாக மாற்ற முடியவில்லை. ஆதலால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழிலில் ஈடுபட சென்றுவிட்டனர். இந்நிலையில் சரியான முறையில் விவசாயத்தை மேற்கொண்டால், விவசாயத்தில் லாபம் பார்க்கும் பார்முலா எங்களிடம் இருக்கிறது என்கிறார்கள் ஜே.எஸ்.எஸ் பயோசக்ஸஸ் நிறுவனத்தினர்.
     உரம், பூச்சிக் கொல்லி, களை போன்றவற்றின் மூலம் விவசாய உற்பத்தியை, மகசூலைப் பெருக்க முடியும் என்று நம்புவதே தவறு என்கிறார்கள் இந்நிறுவனத்தினர். உற்பத்தி செலவைக் குறைத்து உற்பத்தியை அதிகப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்கிறார்கள்.
     தற்போது அறிமுகமாகியுள்ள பி2 அக்ரி, பயோசக்ஸஸ்  வேளாண் அறிவுத்திறன் நிறுவனம் மிக குறைந்த கட்டணத்தில், விவசாயிகளை உறுப்பின்றாக்கிக் கொள்கிறது. விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை நியாயமான விலையில், இடைத்தரகர்கள் இல்லாமல் வழங்குகிறது. இந்நிறுவனம் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற நிறுவனம்.
       இதில் தொடங்கப்பட்ட ஓராண்டில், 2000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். 20,000 க்கும் மேற்பட்டோர் சாதாரண பதிவும் செய்துள்ளனர். இந்நிறுவனம்  விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதுடன் விவசாயத்தை வெற்றிகரமாக நடத்த வழிகாட்டியும் வருகிறது. விவசாயிகள் இந்நிறுவனத்தின் வழிகாட்டுதல் படி விவசாயம் மேற்கொண்டால், கண்டிப்பாக விவசாயத்தை லாபகரமானதாக்க முடியும்.இத்திட்டத்தை பற்றிய மேலும் விபரங்கள் அறிய
தொடர்புக்கு,
ஜே.எஸ்.எஸ் பயோசக்ஸஸ்,
கோவை: 9487801515. 

Comments

  1. பெரிய புண்ணியம் செய்தீர்கள் தோழி...? அவசியம் உடனடி தீர்வுகள் வேண்டும் ப்ளாட் போடும் முறைக்கு... நன்று.

    ReplyDelete
  2. அவசியமானதொரு பகிர்வு தோழி

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்