அதிசய நாய்


 மனித முகமுள்ள அதிசய நாய்!   

டோனிக்

நாம் யாராவதை திட்டும் போது நாய் மாதிரி என திட்டுவோம். ஆனால் இங்கு ஒரு நாய் மனிதனைப் போல் இருக்கும் அதிசயத்தை பாருங்கள்.அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள, மிஸ்வாகா நகரில், ஒரு வினோதமான உருவமுள்ள நாய், விலங்குகள் நல காப்பக அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த நாய்க்கு, 2 வயது தான் ஆகிறது. இதன் முகம், அச்சு அசலாக, மனிதர்களின் முகம் போல், காட்சி அளிக்கிறது. டிஜு-பிடுல் ஆகிய இரு, வெவ்வேறு ரக நாய்களின், கலப்பில் பிறந்த இந்த நாய்க்கு, "டோனிக்' என, பெயர் சூட்டியுள்ளனர்.டோனிக்கை, விரைவில் தத்து கொடுக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் புகைப்படம், இணையதளத்தில் வெளியானதை அடுத்து, அமெரிக்கா முழுவதுமிருந்து, அந்த நாயை தத்தெடுக்க, விண்ணப்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

விலங்குகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில், "வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால், இதைப் பார்த்து, பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மனிதர்களுடன், நன்றாக பழகுகிறது. ரொம்ப சாதுவாக இருக்கிறது. மிகவும் அரிதாகத் தான், இதுபோன்ற நாய்கள் கிடைக்கும்...' என்கின்றனர். 

நன்றி
தினமலர்

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்