நீங்கள் ‘பரோட்டா’ பிரியரா?


                       
  ஆம் என்றால் ஒரு நிமிடம் இதை படியுங்க…
       பெரும்பாலும் வீட்டை விட்டு வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை பார்பவர்களுக்கு, தன் அன்றாட உணவில் ஒரு வேளை ‘பரோட்டா’ கட்டாயம் இருக்கும். மிக சிறிய ஹோட்டல்கள், ரோட்டோர கடைகள் என எங்கும் எந்த நேரத்திலும் ‘இல்லை’ என்றில்லாமல் எளிதாக கிடைக்கின்ற இந்த ‘பரோட்டா’ பலரது விருப்ப உணவாக உள்ளது.சாதாரணக் கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும் ‘பரோட்டா’ வில் அதிகபடியான எண்ணெய், முட்டை, தரமில்லாத மைதா மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால் 2 ‘பரோட்டா’ க்கள் சாப்பிட்டுவிட்டு இரவில் படுத்தாலே, ஏதோ வயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டது போல் வயிறே கனக்கும்.
       இதுவே, தரமாக தயாரிக்கப்பட்ட ‘பரோட்டா’ என்றால்…மிக மிருதுவாக, இழை இழையாக சாப்பிடவே இன்பமாக இருக்கும். பொதுவாகவே, மைதா மாவில் செய்யப்படும் உணவு பண்டங்களில் நார்ச்சத்து இருக்காது. அதிலும் தரமற்ற எண்ணெய், வெந்தும் வேகாத தரமற்ற ‘பரோட்டா’ என்றால் கேட்கவும் வேண்டுமா? நார்சத்து இல்லாத இந்த ‘பரோட்டா’ –வால் உடலில் எந்த சத்தும் சேர்வதில்லை.செரிமானமும் குறைவதால் இதனால் பலம் என்பதை விடவும் பாதகம் தான் அதிகம்.
      அரைக்கபடும் தரமான கோதுமையிலிருந்து ரவை, மாவு உள்ளிட்ட இதர பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின் இறுதியில் மிஞ்சுவது பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் ஆன மாவு மட்டுமே. இந்த மாவுடன் பென்சாயில் பெராக்சைடு மற்றும் அலக்ஸான் என்னும் வேதி பொருட்கள் சேர்க்கும் போது மாவு பிளீச் செய்யப்பட்டு தூய நிறத்திலான மிருதுவான மைதா மாவாக நமக்கு கிடக்கிறது.
     இந்த வேதிபொருட்கள் நமது உடலில் சக்கரையை கூட்டக்கூடிய பணியை செவ்வனே செய்கிறது. பென்சாயில் பெராக்சைடு தலைக்கு பூசக்கூடிய ஹேர் டையில் சேர்க்கப்படும் கெமிக்கல் ஆகும். இதனால் நமது உடலில் இன்சுலின் சுரப்புக் குறைகிறது. அலெக்ஸானோ அறிவியல் பரிசோதனைக்கூடங்களில் எலிகளுக்கு சோதனை முறையில் சக்கரை வரவளிக்க பயன் படுகிறது. சுவையாக இருக்கிறது என்பதற்காக ‘பரோட்டா’ வை அதிகமாக சாப்பிட்டுவிட்டு செரிமான கோளாறு, உடல் எடை கூடுதல் , சக்கரை நோய் தாக்குதல் போன்ற பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு அவதிபட கூடாது.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்