இதுவும் ஆயுத பூஜை தான் ....

இன்று ஒவ்வொரு தனி மனித உழைப்புக்கும் காரணமான வயிற்றுப்பிழைப்பு நாள்(16 அக்டோபர் ). அது தான் ஐநாவால் அறிமுகப்படுத்தப்பட்ட உலக உணவு தினம் .  ஆனால் எம் கண்களுக்கு தெரிவது நாம் முக்கியத்துவம் கொடுப்பது எந்தவித பயனுமற்ற ஒரு விழா ஆயுத பூஜை . 

இதுவும் ஆயுத பூஜை தான் .ஆனால் சாவிக்கொத்துகளை அடுக்கி மிதமிஞ்சிய உணவினால் நடைபெறும் பூஜை அல்ல .. உணவு இல்லாததால் ஆயுதத்தின் மூலம் உணவு தேவையை பூர்த்தி செய்யும் முறை . வேறு எங்குமில்ல ..நம் ஆசியா , இந்தியாவில் தான் .இது 


Mirgitand 
எனும் இந்திய கிராமத்தில் பசியை போக்குவதற்காக இரும்பு ஆயுதத்தால் வயிற்றில் சூடு வைக்கும் முறை . இன்னமும் தொடர்கிறது  ........

இந்தியாவில் மட்டும் மொத்தமாக இரண்டு மில்லியன் சிறுவர்கள் பட்டினியால் இறக்கின்றனர் . ஒரு நாளைக்கு 6 ,000  சிறுவர்கள் வீதம் . 
அதுவும் இந்தியாவில் மட்டும் 43 வீதமான சிறுவர்கள் நிறை குறைந்தவர்கள் . சீனாவில் வெறும் ஏழு சதவீதமே .... உலகத்தில் முதலாவது இடத்தில் இந்தியா...

கார்டியன் பத்திரிக்கை ஆசிரியர் குழாம்  சென்ற போது அவர்களுக்கு கிராமத்தவர்கள் கூறியது  "இவ்வாறு வயிறு பெருத்து வந்தால் வாழை இலை  வைத்து சூடு போடுவோம் , வழியாdல் கத்தினால் கிருமிகள் இறக்கின்றன என்று அர்த்தம் " ஆனால் இந்த முறைகள் கிருமி தொற்று ஏற்ப்பட்டு அந்த கிராமத்தில் பல சிறுவர்கள் இறந்துவிட்டனர் .ஆசியா மிகப்பெரும் சவாலை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி வரும் . காரணம் அறிவின்மை ,விழிப்புணர்வு இன்மை ,அரசின் திட்டமில்லாத நடவடிக்கை போன்றன .

அண்மையில் கூட  இந்தியாவில் 67,000 தொன் தானியங்கள் பழுதடைந்தன  . இதனால் மாதத்திற்கு 190 ,000 பேருக்கு உணவு வழங்கலாம் என உயர்நீதிமன்றத்தால் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது .

பட்டினியால் 13 .5 மில்லியன் சிறுவர்களும் கல்வியை இழக்க வேண்டி நேர்ந்துள்ளது  . சிறுவர் தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்துவதை எதிர்ப்பதை விட அவர்கள் உருவாகும் இடத்தை தடுப்பது எவளவோ மேலானது .

நாம் சற்று சிந்திக்கவும் வெட்கம் கொள்ளவும் வேண்டிய நிலை ................. இல்லாவிட்டால் மேலே உள்ள ஆயுதத்திற்கான ஆயுத பூஜை பதிவு போலவும் எடுத்துக்கொள்ளலாம் ....


நன்றி : தோழர் ந.தீபக்குமார் 

Comments