நீங்கள் அடிக்கடி மருந்து சாப்பிடுபவரா?                                          
        நீங்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்பவரா? பல மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவரா?
    இதற்கெல்லாம் என்ன காரணம் என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா?அப்படி யோசித்திருந்தால் உங்களுக்கு கிடைக்கும் விடை உணவு பழக்கம்.
ஆம், இன்றைய உணவுகள் மற்றும் உணவு பழக்கத்தினால் தான் நம் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகிறது.இதை தடுக்க ஒரே வழி இயற்கை உணவுகளான கீரைகள், பழங்கள்,பயிறு வகைகள் முதலியவைகளை நம் அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்வது தான்.

நன்மை பயக்கும் கீரைகள்

                ஆரோக்கியமான வாழ்வியலுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுப்பது, மானிடனின் கடமை. முக்கியமாக உணவு விஷயத்தில்  கூடுதல் அக்கறை காட்டுவது அவசியம். இதில் தினசரி உணவில் கட்டாயம் கீரைகள் இருக்க வேண்டும். ரத்தசோகை, முடி அடர்த்தியாக வளர கீரை வகைகள் மிகவும் ஏற்றது. முக்கியமாக,
·           முடக்கற்றான் கீரை
·           முருங்கைக் கீரை
·           வல்லாரைக் கீரை
·           வெந்தயக் கீரை
போன்றவை நம் உடலுக்கு மிகவும் ஏற்றது.
முடக்கற்றான் கீரை
           முடக்கற்றான் கீரையை எடுத்துக்கொள்வது தேகத்துக்கு நல்லது. மூட்டுவலி, வயோதிக முடவாதம் போன்ற முடக்கத்தை அற்றுப்போக செய்வதால், ’முடக்கு அறுத்தான்’ என அழைக்கப்படுகிறது. முடக்கற்றான் கீரை,தோட்டங்கள் மற்றும் வீட்டு வேலிகளில் படர்ந்து வளரும் தன்மை உடையது. ஈரத்தன்மையுள்ள மண்ணில் முளைத்துப்படரும் இதன் தண்டு,இலை, காம்பு என, அனைத்தும் பசுமை நிறத்தில் இருக்கும். இவை மிகுந்த மருத்துவ குணம் உடையது.
          நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, மாவு, தாதுச் சத்துகளுடன் சிறந்த கலோரியும் அடங்கியுள்ளது. மூட்டுவலி, வீக்கம், மூட்டுவாதம், கால் மற்றும் கை உளைச்சல்,குடைச்சல் உள்ளவர்கள், கைப்பிடியளவு முடக்கற்றான் கீரையைப் பறித்து, சிறிதளவு மிளகு, சீரகம், சுக்கு தட்டி போட்டு இரண்டு டம்ளர் நீர் ஒரு டம்ளர் அளவு சுண்டக்காய்ச்சி வரும் கசாயத்தை,காலை, மாலை என, இரு நேரமும் அருந்தலாம். மூட்டுவலி மட்டுமில்லாது,முடக்கு வாதம், மலச்சிக்கல், வாய்வு பான்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
முருங்கைக் கீரை
                        முருங்கைக் கீரையுடன் தேன் மற்றும் இஞ்சிச்சாறு கலந்து பருக ரத்த அழுத்தம் கட்டுபடும். மேலும் பார்வை குறைபாட்டுக்கு முருங்கை கீரை மிகவும் ஏற்றது.
வல்லாரைக் கீரை
                    படிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் பிரச்சனையாக உள்ளது ஞாபகமறதி. வல்லாரை கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துவர ஞாபகசக்தி அதிகரிக்கும்.
வெந்தயக் கீரை
                 இன்றைய நவீன உலகில், சிறுவயது முதல் வயதானவர்கள் வரை எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சனை சர்க்கரை நோய். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வந்தயம்,  வெந்தயக்கீரை முதலியவற்றை அன்றாட உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

Comments

  1. நல்ல பதிவு எல்லோருக்குமே நன்மையளிக்கும்

    ReplyDelete
  2. சகோ உங்கள் பதிவுகள் அனைத்தும் கருத்துச் செறிவுடன் உள்ளது

    ReplyDelete
  3. நீங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் அவசியமானதுதான்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்