நீங்கள் ப்ளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவியரா?


நீங்கள் ப்ளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவியரா?


  நீங்கள் ப்ளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவியரா? உங்களுக்காக காத்திருக்கிறது பரிசுத்தொகை.
ஆம், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஆதி திராவிடர், பழங்குடி மாணவர்களுக்குப் பரிசு காத்திருக்கிறது.
   அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 100 மாணவர்கள், 1000 மாணவியருக்கு, ‘தமிழ் முதல்வரின் தகுதி பரிசுத்தொகை’ வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை பரிசுத் தொகையாக ரூ. 1,500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது இரட்டிப்புத் தொகையாக, ரூ. 3,000 வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. பரிசுத்தொகையை அள்ள இனி தனியாக பரிட்சை ஏதும் எழுத தேவையில்லை. ப்ளஸ்-2 தேர்வில் அதிக மார்க் எடுத்திருந்தாலே போதுமானது.
   இதற்கு அரசு சார்பில் நிர்ணயக்கப்பட்ட , ‘கட் ஆப் மார்க்’  மாணவர்களுக்கு 1069; மாணவியருக்கு 1082 இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற தமிழை மொழி பாடமாக கொண்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் கூடத்தில் உரிய படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று நகல் ஆகியவற்றை இணைத்து சமர்பிக்க வேண்டும்.
   இந்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கல்வி நிறுவனங்கள் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசு உத்திரவிட்டுள்ளது. தகுதி இருப்பின் இனி தகுதிப் பரிசு இனி உங்கள் கையில்…!Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்