நீங்கள் அடிக்கடி வெளிநாடு செல்பவரா?


 ரீ-டைமர்அப்படியென்றால் உங்களுக்கு இந்த ரீ-டைமர் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

அடிக்கடி வெகு தூர விமானப் பயணங்களை மேற்கொள்ளுபவர்கள் ஜெட்லாக் எனும் நேர வித்தியாச நிலைமையினால் சிரமப்படுவார்கள். ஏனெனில் ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு செல்லும் போது பகல், இரவு நேரங்கள் வித்தியாசத்தால் நமது உடல் புதிய, சூழ்நிலைக்கு தக்கவாறு தனது நிலையை மாற்றிக் கொள்ள சில தினங்கள் ஆகும்.
இப்புதிய கண்டுபிடிப்பால் இந்தச் சிரமத்தை அடியோடு நீக்கமுடியும். ஜெட்லாக் மற்றும் தூக்கமின்மை குணமாகும். இக்கண்ணாடி ஒரு மிருதுவான பச்சை நிறத்தை ஒளிவிடுகிறது. இதனால் நமது தூக்கப்பழக்கங்கள் சீராகி விடுகின்றன.


இதன் பெயர் ரீ-டைமர். நீண்ட தூரம் விமானப் பயணம் செய்பவர்கள் இதை அணிந்துகொண்டால், புத்துணர்ச்சியுடன் விமானத்தினின்றும் கீழே இறங்க முடியும் என்கிறார். இதனைக் கண்டு பிடித்த புரொஃபஸர் லியான் லாக் இதனை அணிந்து கொண்டால் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மற்றும் ஷிஃப்ட் முறையில் வேலை செய்பவர்கள் புத்துணர்ச்சியுடன் விளங்குவார்கள்.

இது எப்படி நிகழ்கிறது என்றால் ரீ-டைமர் மூலம் வெளிப்படும் ஒளி நமது மூளையில் செயல்படும் சிர்கேடியன் அலைவரிசைகளைச் சூழ்நிலைக்குத் தக்கவாறு மாற்றுகிறது. நமது உடலில் நம்மையறியாது செயல்படும் இயற்கைக் கடிகாரமான சீர்கேடியன் கடிகாரத்தின் தன்மையை மாற்றுகிறது. இந்த சீர்கேடியன் கடிகாரத்தினால்தான் நாம் வழக்கமான நேரத்தில் உணவு உண்பதும், நேரத்தில் தூங்கி விழிப்பதும் சாத்தியமாகிறது. இதன் தன்மையை இக்கண்ணாடி சூழ்நிலைக்குத் தக்கவாறு சீரமைக்கிறது.

சுருக்காகத் தூங்கி விடிகலையில் எழுந்திருக்க நினைப்பவர்கள் இக்கண்ணாடியைக் காலை நேரத்தில் 50 நிமிடங்கள் அணிந்து கொள்ள வேண்டும். நேரம் கடந்து தூங்கி, நேரம் கடந்து எழ நினைப்பவர்கள் படுக்குமுன் 50 நிமிடங்கள் அணிந்து கொள்ள வேண்டும்.

இம்மூக்கு கண்ணாடிகள் பாட்டரியால் இயங்குகின்றன. இங்கிலாந்தில் வெப்சைட் மூலமாக 162 பவுண்ட் ஸ்டர்லிங்கிற்கு வாங்கலாம். இக்கண்ணாடியை நாம் சாதாரணமாகச் செய்யும் தினசரி வேலைகளின் போதும் - உதாரணமாக கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது படிக்கும்போதும் அணிந்து கொள்ளலாம்.விஞ்ஞானமும், தொழிற்நுட்பமும் எப்படி முன்னேறியிருக்கிறது பாருங்கள்.