நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா?


நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோரா?

   தற்போது சிறு, குறு தொழில்கள் ஆலம்பிப்பது சுலபம். வங்கிகளும் தாராளமாக கடன் வழங்க முன்வருகின்றன. போதிய அனுபவமும் அதற்கான தொழில்நுட்ப வசதியும் இருந்தால் , தொழில் முனைவோர் ஆகலாம்.ஆனால் தொடர்ந்து தொழிலை லாபகரமாக நடத்த வேண்டுமானால், அதற்காக தொடர்ந்து போராட வேண்டும்.
நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோராக சில வழிகள்.
v  அடுத்தவர் கையில் உற்பத்தியை ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுக்கக்கூடாது.
v  தொழிலின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் திட்டமிடல், கண்காணிப்பு அவசியம்.
v  வங்கிகளில் கடன் வாங்கும் போது உச்ச வரம்பு, அதற்கான வட்டி விகிதம், சலுகைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.
v  வாங்கும் இயந்திரங்கள்,நடைமுறை பொருட்களுக்கு ரசீது கண்டிப்பாக வாங்க வேண்டும்.
v  உற்பத்தி செலவுக்கான மின்செலவை கணக்கிட்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
v  உற்பத்தி செலவில் வாங்கும் பொருட்களின் சதவிதம், உற்பத்தி செலவின் சதவிதம், வேலையாட்கள் செலவு இதர செலவுகளை கணக்கிட்டு, லாபத்தின் சதவிதத்தை கணக்கிட வேண்டும்.
v  உற்பத்தி செய்த பொருட்கள் எத்தனை நாட்களுக்கு பின் விற்பனைக்கு செல்கிறது, எத்தனை நாட்களுக்கு பின் பணம் திரும்ப கிடைக்கும் என்பதை கணக்கிட வேண்டும்.
v  தரத்தில் மட்டும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.ஆரம்பத்தில் விற்பனை இருந்தாலும், நாளடைவில் தரமில்லாத பொருட்கள் சந்தையில் நிற்காது.
v  எடுத்தவுடன் லாபம் கிடைக்கும் நிறைய சம்பாதிக்கலாம் என நினைக்கக் கூடாது.
v  போட்டியாளர்கள் யார், என் விலையில் விற்கின்றனர், அந்த விலையில் தரமான பொருள் உற்பத்தி செய்ய முடியுமா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
v  வேலையாட்களிடம் அனுசரணையான நடைமுறை, அவர்களை தொடர்ந்து நம்மில் நீடிக்கச் செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 இவையனைத்தையும் பின்பற்றினாலே நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோராக வலம் வரலாம்.

Comments