காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்


     தொழிற்களம் குழுவின் இனிப்பான காலை தேநீர் வணக்கம். பதறாத காரியம் சிதறாது! ஆதலால் நீங்கள் செய்யும் எந்த செயல்களையும் பதறாமல் செய்தால் வெற்றி உங்கள் பக்கம். இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமாக அமைய தொழிற்களம் வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


v  உலகத்தில் உன்னதமான பொருள் பரிபூரணமடைந்த பெண்ணே.
v  காலத்தில் செய்வதைத் தள்ளிப் போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும்.
v  அழகு பெண்களுக்கு ஆபத்து என்றால் அது ஏழையாக இருக்கும் போது தான்.
v  உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கங்கள்.
v  முடியுமானால் பிறறைவிட அறிவாளியாக இரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.

தினம் ஒரு தகவல்

ப்ரீவேர் சாப்ட்வேர்(Freeware software) முற்றிலும் இலவசமாக நமக்கு கிடைப்பது.  ஷேர்வேர் சாப்ட்வேர்(Shareware software) ஒரு குறிப்பிட்ட காலம் இலவசமாக நமக்கு கிடைப்பது. பிடித்திருந்தால் பின் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வது. இது பெரும்பாலும் அதிக விலை இருக்காது.

Comments