பற்களை பாதுகாக்க வந்தாச்சு தொழிற்நுட்பம்…!


பற்களை பாதுகாக்க வந்தாச்சு தொழிற்நுட்பம்…!


மனிதர்களின் தொழிற்நுட்ப கண்டுபிடிப்பிற்கு அளவே இல்லாமல் போய் விட்டதுங்க! ஆமாம் நம்பினால் நம்புங்கள்: பற்கள் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புக் குறித்த சிகிச்சை, சிந்து சமவெளி நாகரிகம் உருவானபோதே, தொடங்கிவிட்டது. இதோ, சில சமீபத்திய அயல் நாட்டு கண்டுபிடிப்புகள். இங்கே இவை அறிமுகமாக, குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது ஆகும்.· நைசான கண்ணாடித் தூள் கலந்த டூத் பேஸ்ட் அமெரிக்காவில் பிரபலம். பற்கள் பாழாகாமல் கூசாமல் இருக்க உதவுவதோடு, பளபளப்பையும் தருகிறது.

· மேல் வரிசைப் பற்களில் கூடுதலான நேரம் பல்லின் வேரைச் சரிபார்க்க உதவும் வகையில், அனஸ்தடிக் ஸ்ப்ரே வந்து விட்டது. ஈறு நோய்களையும், பற்கள் சிதைவையும் தடுக்கும் மாயமந்திரம் போல் சிகிச்சை!

· கன்னச் சதையிலுள்ள செல்களைப் புதிய ஈறின் திசுக்களாக மாற்றலாம். கம்ஷீல்ட் என்ற ஈறு-மூடி, பற்கள் சரியான வரிசையில் இருக்க உதவும். இப்போது வர ஆரம்பித்திருக்கிற பிரேஸ்கள் போடுவது நல்லது.

· கீ-ஹோல் டென்டல் இம்ப்ளான்ட் சர்ஜரி, அதிகமாகத் துளை போடாமல், விரைவில் குணமடைய உதவும். அனஸ்தடிக் (மயங்கியிருக்கும்) நிலையை உடனடியாக மாற்ற வழி இருப்பதால், ஃபில்லிங் முடிந்தவுடன் மரத்துப் போனநிலை பல மணி நேரம் இருக்கத் தேவையில்லை.

· பற்களின் நிறத்திலேயே ஃபில் அப் கிடைத்தால், மேல் பூச்சு தேவையில்லை. புதிய வாய்ப் பாதுகாப்பு ( மவுத்கார்ட்) கிடைக்கிறது. நீங்கள் மென்று தின்ன அதிகம் சிரமப்பட வேண்டாம். இது தசைக்குக் கூடுதல் பலம் தருகிறது.

· வாய் உமிழ்நீரை சோதனை செய்தால் கான்சர் முதல் டயபடீஸ் வரை, பல நோய்களைக் கண்டுபிடித்துவிடலாம். பற்கள் கெடுவதைத் தடுக்கும் பல அம்சங்கள் தேங்காய் எண்ணெயில் இருக்கின்றன.

Comments