உலகின் மிக வயதான தந்தை!

உலகின் மிக வயதான தந்தை!


அரியானா மாநிலத்தை சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர், "உலகின் மிக வயதான தந்தை' என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரது பெயர் கரம்ஜித் ராகவ். வயது 94. இவரது மனைவி சகுந்தலாவுக்கு, 59 வயதாகிறது. இவர்களுக்கு, சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மிகவும் வயதான தந்தைக்கு பிறந்தாலும், அந்த குழந்தை, மற்ற குழந்தைகளைப் போல் ஆரோக்கியமாகவே உள்ளது. "இந்த தள்ளாத வயதில் எப்படி உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தது?' என, கரம்ஜித் ராகவிடம் கேட்டபோது, "இது இறைவன் கொடுத்த பரிசு. தினமும் காலையில் எழுந்தவுடன், மூன்று லிட்டர் பால் குடிப்பேன். புரோட்டா, சப்பாத்தி, அரிசி சாதம் ஆகியவற்றையும் ஒரு கை பார்ப்பேன். கண்டிப்பாக, தினமும் உணவில் அரை கிலோ நெய் சேர்த்துக் கொள்வேன். இன்னும் பத்தாண்டுகள், என்னுடைய மகனுடன் விளையாடுவேன். அதற்கான உடல் வலிமை எனக்கு உள்ளது. இன்னும் ஒரு குழந்தை பெற்றால் கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை...' என, குடு குடு வயதிலும், ஜோக் அடிக்கிறார், இந்த அதிசய தந்தை.

Comments