தடையில்லா மின்சாரம் வேண்டுமா?


தடையில்லா மின்சாரம் வேண்டுமா?

       நம் மாநிலத்திற்கு தடையில்லா மின்சாரம் வேண்டுமா? அப்படியானால் முதலில் மின் திருட்டை ஒழிக்க வேண்டும். ஆம் மின் பற்றாகுறைக்கு நுகர்வு அதிகரிப்பது மட்டுமின்றி, மின் திருட்டும் முக்கிய காரணமாக அமைகிறது. தமிழகத்தில் மின் பற்றாகுறையை சரி செய்ய புதிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.
       ஆனால், பண ஆதாயம், மின்தடை நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவும், உடனடி தேவைக்காகவும் மின்சாரத்தை மின் கம்பத்திலிருந்து வாரியத்தின் அனுமதியின்றி நேரடியாக எடுக்கின்றனர். குறிப்பாக தொழில் துறையிலேயே அதிகளவில் மின் திருட்டு அரங்கேறுகிறது. பல்வேறு விதமான தொழிற்சாலைகளில் மின் திருட்டு நடப்பதாக மின் வாரிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தொழில் நிருவனங்களில் மின் திருட்டு செய்யும் போது, உற்பத்தி பொருளின் விற்பனையில் கிடைக்கும் லாபத்திற்கு ஈடாக தொகை கிடைக்கும்.
       அரிசி ஆலைகளில் அரைக்கப்படும் நெல் மூட்டைகளின் அளவை மின்சார மீட்டர் உபயோகத்தின் மூலம் கணக்கிட்டு கண்டறியலாம். இதன் காரணமாக மின்சார உபயோக அளவை மறைக்க வாய்ப்புள்ளது. தொழிற்சாலைக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மின்சாரம் சென்றால், இணைப்பை துண்டித்துவிடும் சூழ்நிலை இருந்தால் மின் உபயோக அளவை குறைத்துக்காட்ட வேண்டும். இது போன்ற பல்வேறு சூழ்நிலையில் மின் திருட்டு நடக்கிறது. இதை அவ்வப்போது மின் வாரிய அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தி , முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களை கண்டறிந்து அபதாரம் விதிப்பது, இணைப்பை துண்டிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.
        மொத்த மின் உபயோகத்தில் 40 சதவிதம் வரை மின் கம்பியிலும், மின் சாதணங்களை முறையாக பயன்படுத்தாததாலும் வீணாவதோடு மின் திருட்டிலும் செல்கிறது. இவ்விஷயத்தில் அரசு உரிய கவனம் செலுத்தினால், தொழில் துறையினர், பொதுமக்கள் என அனைவரும் தேவையான மின்சாரத்தை தடையின்றி உபயோகிக்க முடியும்.

நன்றி
தொழில்மலர்

Comments