காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

        அன்பான உறவுகளுக்கு இனிய காலை தேநீர் வணக்கம். மலர்ந்த பூ மொட்டு,கரந்த பால், குழந்தையின் சிரிப்பு, முதல் பனித்துளி இவைகளை போல் தூய்மையான வாழ்க்கை அமைய உங்களை தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


Ø  சான்றோர்கள் குற்றத்தைத்தான் வெறுப்பார்கள். குற்றவாளிகளை வெறுக்கமாட்டார்கள்.
Ø  பார்க்கமாட்டேன் என்பவர்களைவிட குருடர்கள் யாருமில்லை.
Ø  நாம் பேசும் சொற்கள் வாயிலிருந்து வரக்கூடாது, இதயத்திலிருந்து வர வேண்டும்.
Ø  எண்ணங்களை சம்பவமாக்குவது அரசியல், சம்பவங்களை எண்ணமாக்குவது இலக்கியம்.
Ø  புகழுக்காக நேர்மையை மாற்றிவிடக் கூடாது.

Comments