சசிகுமார், சந்தானம் மற்றும் பாலா : சினிமா , சினிமா

 
 
சசிகுமார், சந்தானம் இணையும் படம்!

தெலுங்கில் நடிகையாக இருந்து தயாரிப்பாளராக அறிமுகமானவர் லட்சுமி மஞ்சு. இவர் மோகன் பாவுவின் மகள் ஆவார். இவர் 'குண்டெல்லோ கோதாரி' எனும் தெலுங்குப் படத்தை தமிழில் 'மறந்தேன் மன்னித்தேன்' எனும் பெயரில் வெளியிடுகிறார். இவர் தமிழில் மணிரத்னத்தின் 'கடல்' திரைப்படத்தில் நடித்தவர்.

தற்போது இவர் சசிகுமார், சந்தானம் ஆகியோரை இணைத்து தமிழில் 'பிரம்மன்' எனும் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளதால் இது தொடர்பான முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமெனத் தெரிகிறது .

300 தியேட்டர்களில் 'பரதேசி'!

பாலாவின் 'பரதேசி' திரைப்படம் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்குள் சிக்கியிருக்கிறது என்பது உண்மைதான். இது வரை பாலா இயக்கிய படங்களிலேயே மிகச் சிறந்த படமாக உருவாயிருக்கிறது என சினிமா வட்டாரம் கிசு கிசுக்கிறது. உதாரணமாக சமீபத்தில் வந்த வீடியோவைச் சொல்லலாம். மேலும் இந்தத் திரைப்படத்தில் அதர்வா, தன்ஷிகா, வேதிகா, உமா ரியாஸ்கான் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில், பாலாவின் ‘பரதேசி’ திரைப்படம் மார்ச் 15ல் உலகமெங்கும் வெளியாவதுடன், தமிழ்நாட்டில் 300 தியேட்டர்களில் வெளியாகிறது. குறிப்பாக, அதே 15ஆம் தேதிதான் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்த 'வத்திக்குச்சி' திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Comments