காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை தேநீர் வணக்கம். ‘துன்பம் இல்லா வாழ்க்கை இன்பமே!’. இன்றைய உங்கள் பொழுது இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


Ø  அன்பும் மரியாதையும் கொண்டிருப்பவன் இந்த உலகில் எதையும் சாதித்துவிடுவான்.
Ø  துணிவு இல்லையேல் வாய்மையில்லை. வாய்மையில்லையேல் பிற அறங்கங்களும் இல்லை.
Ø  ஆபத்துக்கு உதவுவது சொந்தம் இல்லை, நட்புதான்.
Ø  நிலமைக்கு தக்கபடி நடந்துகொள். அதுவே புத்திசாலித்தனம்.
Ø  பயன் கருதி அன்பு காட்டுவதைவிட காட்டாமல் இருப்பதே மேல்.

தினம் ஒரு தகவல்

     கம்ப்யூட்டரில் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா? லைக் பட்டன் நிறைய விழுகிறது என்று மகிழ வேண்டாம்! யாரும் க்ளிக் செய்யாமலே, ஏன், விசிட் கூட செய்யாமலேயே லைக் வருகிறதாம்! ஏதோ ஒரு பக்தான் காரணமாம்! கூடி விரைவில் சரிசெய்துவிடுவோம் என்கிறார்கள் ஃபேஸ் புக் நிறுவனத்தினர்.


Comments