காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

         அன்பான உறவுகளுக்கு இனிய காலை தேநீர் வணக்கம். மலர்ந்த பூ மொட்டு,கரந்த பால், குழந்தையின் சிரிப்பு, முதல் பனித்துளி இவைகளை போல் தூய்மையான வாழ்க்கை அமைய உங்களை தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.
 

இன்றைய சிந்தனைத்துளிகள்.Ø  மலர்ந்த முகம் சாதாரண உணவை அறுசுவையாக்கிவிடும்.
Ø  கொடுப்பதை மறப்பதும், பெற்றதை நினைப்பதும் நட்புக்கு அழகு.
Ø  சோம்பலின் விளைவு வறுமை, முயற்சியின் விளைவு மூலதனம்.
Ø  அன்பான சில வார்த்தைகளே பெண்ணுக்கு அணிகலன்.
Ø  ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையேல் அவன் வாழ்வு சிறக்காது.

தினம் ஒரு தகவல்

நிசார்க்ருணா கேஸ் ப்ளான்ட்நிறுவனம் கழிவு பொருட்களை எரித்து அதன் மூலம் எரி பொருளும் உரமும் வெற்றிகரமாகத் தயாரித்து வருகிறது. முதன் முறையாக பெங்களூரு அரசு நகரின் 12 இடங்களில் இந்த ப்ளாண்டை நிறுவி எரிபொருள் உற்பத்தி செய்ய உள்ளது.

Comments