காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்

தொழிற்களம் குழுவின் இனிய காலை தேநீர் வணக்கம்.முயற்சி திருவினையாக்கும்! எத்தனை வாய்ப்புகள் நம்மைத்தேடி வந்தாலும் அதை முயன்றால் மட்டுமே நம் வாழ்வில் வெற்றி நிச்சயம். இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமாக அமைய தொழிற்களம் வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.v  அன்பு உள்ள காலம் வரை மன்னிப்பதும் உண்டு.
v  அடக்கமாக வாழ்பவன் இன்மையிலும் வறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
v  கணவரின் விருந்தாளியை விட மனைவியின் விருந்தாளி பாக்கியசாலி.
v  கண்டிக்கத் தெரியாதவனுக்குக் கருணை காட்டத் தெரியாது.
v  குருட்டுப் பறவையின் கூடு இறைவன் கட்டியது.

தினம் ஒரு தகவல்

வரலாற்றையே வியக்க வைத்த ஆண்டோனியோ, இசைக்கருவிகள் செய்பவர். 1644க்கும் 1737க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். இவருடைய பேவரிட் இசைக்கருவி வயலின். தனக்கே உரிய ஸ்பெஷல் பார்முலா படி அவர் உருவாக்கிய வயலின்கள் அதி அற்புதம். அதை எப்படி உருவாக்கினார், என்ன கணக்கு வைத்திருந்தார் என்பதெல்லாம் அவர் வெளிப்படுத்தாத மாபெரும் ரகசியம்.

Comments