காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்


தொழிற்களம் குழுவின் இனிய காலை தேநீர் வணக்கம். நாம் வாழ்க்கையில் சிகரம் எட்ட வேண்டுமானால் எத்தனை சொதனைகள் வந்தாலும் அதை எதிர்த்து போராட வேண்டும். அப்படி போராடினால் வெற்றி நிச்சயம். இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமாக அமைய தொழிற்களம் வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


v  ஆரம்பிக்கும் போதே முடிவையும் சிந்தனை செய்து வையுங்கள்.
v  வாழ்க்கை இடைவிடாத குடிவெறி. மகிழ்ச்சி மறைந்த பின்பும் தலைவலி இருந்து கொண்டே இருக்கும்.
v  எந்த மனிதனையும் அதிகம் சோதிப்பது இவனுக்கு எது பிடிக்கும் என்ற கேள்வியே.
v  அதிக வறுமைப்பட்டவரும், அதிக செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்.
v  சூதாட்டம் என்பது முட்டாள்களுக்கு மட்டும் இயற்கையால் விதிக்கப்படும் ஒரு பளுவான வரி.

தினம் ஒரு தகவல்

ஜப்பானின் TES New Energy என்ற நிறுவனத்தால் Pan energy என்ற ஒரு புதிய USB Charger கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் மொபைலுக்கு சார்ஜ் போட மின்சாரம் தேவையில்லை வெப்பம் இருந்தாலே போதும். சூடான பொருட்கள் மீது இந்த கருவியை வைத்து மொபைலை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த கருவி வெப்ப ஆற்றலை நேரடியாக மின்ஆற்றலாக மாற்றி மொபைல்களுக்கு சார்ஜ் செய்கிறது. இந்த கருவி மூலம் செல்போன்கள், MP3 பிளேயர்ஸ், IPOD மற்றும் USB இணைப்பு இருக்கும் எல்லா கருவிகளுக்கும் சார்ஜ் போட முடியும் என்பது இதன் கூடுதல் வசதியாகும்.

Comments