"நேரம் சரியில்லை என்றல் யானை மீது சென்றாலும் நாய் கடிக்கும்"

 "நேரம் சரியில்லை என்றல் யானை மீது சென்றாலும் நாய் கடிக்கும்"

     யானை மீது செல்லும்போது, நாய் கடிக்ககூடும் என்று முன்பே தீர்மானித்து விட்டால், என்ன செய்வீர்கள்? கீழேயே பார்த்துக்கொண்டு போவீர்கள்.

     அப்படிப் பார்வையை நேராக வைக்காமல், கீழே நோக்கி வைத்திருந்தால், எதிர்பாராமல், அந்த உயரத்தில் ஏதோ ஒரு மரக்கிளை உங்களை மோதலாம்: கீழே தூக்கி எறியப்படலாம், அங்கே ஒரு நாய் மீது நீங்கள் விழலாம். அது மிரண்டு போய் உங்களை கடிக்கலாம்.
இந்த சிக்கலான சங்கிலித்தொடர் நிகழ்வுகளை தெய்வச் செயல் என்று சொல்லி தப்பிக்கப் பார்க்காதீர்கள்.

     மரக்கிளை உங்கள் மீது வந்து மோதவில்லை. நீங்கள் தான் ஒழுங்காக கவனமில்லாமல், மரக்கிளையின் மீது சென்று மோதிநீர்கள். நாய் மீது விழுந்தீர்கள். நீங்கள் அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின் விளைவு இருக்கத்தான் செய்யும்.
உங்கள் கவனமின்மையால் நேர்ந்த நிகழ்வை, நேரம்சரியில்லை என்று அதன் மீது பழிபோட்டு மூடி மறைப்பது என்ன நியாயம்.
     
     உங்களை நாய் கடிக்கவில்லை. நீங்கள் எட்ட முடியாத உயரத்தில் இருந்த போதிலும், கவனமற்ற உங்கள் முட்டாள்தனம்தான் நாயகடியில் கொண்டு விட்டது.

     உங்களை தவறை ஏற்க மனமில்லாமல், நேரத்தின் மீது பழிபோடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் .

     அனுபவத்தில் சொல்கிறேன் . மோசமான நேரம என்பதே கிடையாது. நம் வாழ்வில் ஒவ்வொரு கணமும் அற்புதமாகத்தான் இருக்கிறது, அதை மோசமாக்கிக் கொள்வது நம்முடைய எண்ணங்களும் செயல்களும்தான்.

மூன்றாவது கோணம் புத்தகத்திலிருந்து 

Comments

  1. அனுபவத்தில் சொல்கிறேன் . மோசமான நேரம என்பதே கிடையாது. நம் வாழ்வில் ஒவ்வொரு கணமும் அற்புதமாகத்தான் இருக்கிறது, அதை மோசமாக்கிக் கொள்வது நம்முடைய எண்ணங்களும் செயல்களும்தான்.//
    மிகவும் சரியாகச் சொன்னீர்கள் .சிறந்த ஆக்கம் .மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்