பயணமும்.. பயின்றதும்.....ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தொழிற்களம் வலைபதிவின் ஊடாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..

நிறைய எழுதவேண்டுமானால் நிறைய பயணிப்பதும் பயணத்தின்போது பல விஷயங்களை கற்று கொள்வதும் அவசியமாகிறது.. நானும் பயணித்தேன்.. அதில் நிறைய புதுமையான அனுபவங்கள் இரு வாரங்கள் எவ்விதம் கழிந்தது என்றே தெரியவில்லை..

இரண்டு வாரத்தில் மூன்று முறை அவ்விடம் செல்ல நேர்ந்தது சென்றேன்.. புதுமையான பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் ஒரு குழந்தை நடை பயில்வதை போல..

நாற்பது நிமிடங்கள் நீளும் பயணத்தில் என் கவனம் முழுதும் நான் சென்று சேர இருக்கும் இடத்தை பற்றியே இருந்தது.. எப்படி இருக்கும் அவ்விடம் கதைகளில் கேட்பது போன்றா ?? சினிமாக்களில் பார்ப்பது போன்றா ?? யாரையெல்லாம் சந்திப்போம் ?? என்னவெல்லாம் பேசவேண்டும் ? குறி பார்த்த கேள்விகள் என் சிந்தையை சிதைக்கும் முன் சேர வேண்டிய இடம் வந்ததால் செயலிழந்து போயின . .

என் மிகப்பெரிய கனவு ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் நிறைவேற போவதற்காகவே இந்த பயணம் என்று அப்போது எனக்கு தெரியாது

என் மனதிற்கு சரி என்று தோன்றிய விஷயங்களை எல்லாம் இந்த பயணங்களில் செய்து மகிழ்ந்தேன் என்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினேன்.. முக்கியமாக நிறைய கற்று கொண்டேன்.. எழுத்தாளனுக்கு அதுதானே தேவை.. இந்த பயணத்தினால் எனக்கு சமூக ஆர்வலர் என்ற பெயரும் கிடைத்தது...

விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம் வணக்கம்..

Comments