காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்


தொழிற்களம் குழுவின் தித்திப்பான காலை தேநீர் வணக்கம்.வெற்றி, தோல்வி என்பது நம் வாழ்வில் இரு படிக்கட்டுகள் போன்றவை. நாம் மேலே செல்ல வேண்டுமானால் இரண்டு படிகளையும் கடந்து தான் ஆக வேண்டும். நீங்கள் எடுத்து வைக்கும் படிகள் அனைத்தும் வெற்றிபடிகளாக அமைய தொழிற்களம் வாழ்த்துகிறது.


இன்றைய சிந்தனைத்துளிகள்.


v  சண்டை போடும் நேரமெல்லாம் உண்மை அதன் சத்தியத்தை இழந்து விடுகிறது.
v  இழகான பொருள் வற்றாத இன்ப ஊற்று போன்றது.
v  நன்மையை நூறுபேர் விரும்புவார்கள், ஆனால் உண்மையை சிலரே விரும்புவார்கள்.
v  வாழ்க்கை என்பது தூக்கம் என்றால் காதல் அதன் கனவு.
v  எல்லா மனிதனுக்கும் அவனவனுக்கு ஏற்ற விலை இருக்கிறது.

தினம் ஒரு தகவல்

துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.

Comments