காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்காலை தேநீர்


தொழிற்களம் குழுவின் தித்திப்பான காலை தேநீர் வணக்கம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி! நம் செய்யும் செயல் வெற்றிகரமாக அமைய விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி நிச்சயம். இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமாக அமைய தொழிற்களம் வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.


v  நம் வாழ்வில் இளமை பருவம் இலக்கு அற்றது. முப்பது நாற்பது போராட்டம் மிகுந்தது. முதுமை வருந்தத்தக்கது.
v  கட்சி என்பது சிலரது நன்மைக்காக பலருக்கு பைத்தியம் பிடிப்பதாகும்.
v  ஒரே ஒரு இன்பத்திற்காக மனிதர்கள் ஆயிரம் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
v  பூமி ஒன்று தான் மனிதனுக்கு நிரந்திர நண்பன்.
v  உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது.

தினம் ஒரு தகவல்

தேடலுக்கான தளம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கூகுள்.ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு என ஒரு தளம்,கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று விளங்குகிறது. அதன் பெயர் சைரஸ். இந்த தளம் கொண்டுள்ள முகப்புப் பக்கத்தில் எறத்தாழ 41 கோடி தளங்கள் உள்ளன.

Comments