ஐஸ்கிரீமீலும் கார் ஓட்டலாம்!


  ஐஸ்கிரீமீலும் கார் ஓட்டலாம்!    


       ஐஸ்கிரீம்களை சுவைக்க மட்டும் தான் முடியும் என, நினைத்து விடாதீர்கள்; இனிமேல், உங்களின் கார்களை இயக்குவதற்கான எரிபொருளாகவும், அவற்றை பயன்படுத்த முடியும் என்ற, ஆச்சரியமான விஷயம், தெரிய வந்துள்ளது.

        பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலையைச் சேர்ந்த, பேராசிரியர், நிக் டார்மர் தான், இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "பெட்ரோல், டீசல் போன்றவற்றில் உள்ள, கார்போ ஹைட்ரேட்டுகள் போல், நாம், அன்றாடம் பயன்படுத்தும், ஷாம்பூ, குளியல் சோப் மற்றும் சுவைக்கும் ஐஸ்கிரீம் ஆகியவற்றிலும், கார்போ ஹைட்ரேட்டுகள் உள்ளன. இவற்றிலிருந்து, ஹைட்ரோ கார்பன்களை எடுத்து, கார்களுக்கு எரிபொருளாக பயன்படுத்த முடியும்'என்கிறார். ஆனாலும், இதுகுறித்த ஆய்வு, இன்னும் முழுமை பெறவில்லை.

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும், பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு பதிலாக, மாற்று எரிபொருளைத் தேடி, அலைந்து கொண்டிருக்கும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு, இது மகிழ்ச்சியான செய்தி தானே!

நன்றி
வாரமலர்

Comments