காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

அனைத்து தமிழ் பதிவர்களுக்கும்  நமது தொழிற்களம் குழுவின் இனிய காலை வணக்கம்...
இந்த இனிய நாளில் நீங்கள் செய்யும் தொழிலில் வெற்றியும், மனநிறைவும் அடைய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.


இன்றைய சிந்தனைத்துளிகள்.Ø  மனிதன் ஒருவன் தான் சிரிக்கும் தகுதி பெற்றவன். அவன் பிறர் சிரிக்குமாறு ஏன் நடந்து கொள்ள வேண்டும்.
Ø  மன தூய்மையே நேர்மை, மற்றவையெல்லாம் வெறும் கூச்சல்.
Ø  அழகென்பது செயலில் தான் இருக்கிறது, அதை தவிர வேறு அழகில்லை.
Ø  மக்களுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றுவது தான் புரட்சி.
Ø  விழிப்பதற்கே உறக்கம், வெல்வதற்கே தோல்வி, எழுவதற்கே வீழ்ச்சி.

தினம் ஒரு தகவல்

எலிகள் என்றாலே நமக்கு ஒரு எரிச்சல், பயம்... ஆப்பிரிக்காவில் பெருச்சாளி வகையைச் சேர்ந்த பவுச்ட் ரேட் இன எலிகள் காசநோயைக் கண்டுபிடிப்பதல் கில்லாடிகளாம்! காசநோய்க் கிருமிகள் வெளிப்படுத்தும் ஒரு வேதியியல் பொருளை, ஒரு நொடியில் 200 பங்கு நேரத்துக்குள் மோப்பம் பிடித்து உடனே கண்டுபிடித்து விடுவதன் மூலம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாறி உள்ளன இவை. ஒரு மருத்துவர் 40 பேருக்குக் கண்டுபிடிக்கும் நேரத்தில் இவை 1680 கேஸை அறிவித்துவிடும். இதேபோல் சுரங்கங்களையும், பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெடி மருந்து பொருட்களையும் இந்த வகை எலிகள் வெகு எளிதாகக் கண்டு பிடித்துவிடுகின்றனவாம். ராணுவ மரியாதை தான் இவற்றுக்கு!

Comments