காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

     இன்றைய  பொழுது  நீங்கள்  நினைத்தபடி  உற்சாகமாய்  கழியட்டடும். தொழிற்களம்  குழுவின்  இனிய  காலை  வணக்கம்.
 

இன்றைய சிந்தனைத்துளிகள்.Ø  சிந்தனையாளர்களுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம், செய்யாதவர்களுக்கு துன்பியல் நாடகம்.
Ø  உன்னால் எதை அடைய முடியாதோ அதை விரும்பாதே.
Ø  வளைந்து கொடுக்கும் நாணலைப் போல பணிந்து நடப்பவள் சிறப்பை அடைவாள்.
Ø  குழந்தைக்கு விரலில் வலித்தால், தாய்க்கு இதயத்தில் வலிக்கும்.
Ø  லட்சியத்துடன் செயல் செய்யாவிட்டால் லட்சியம் எட்டாமல் பறந்து போய்விடும்.

தினம் ஒரு தகவல்


     நாடுகளுக்கு மட்டும்தான் மேப் போட முடியுமா? அமெரிக்க விஞ்ஞானிகள் மனித மூளைக்கும் மேப் போட்டிருக்கிறார்கள். நமது ஜீன்களுக்கும் முளைக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆராய்ச்சியின் ஒரு முக்கிய மைல் கல் இது. மூளையின் 900 பகுதிகளில், 100 மில்லியனுக்கு மேற்பட்ட மில்லியனோக்கு அளவுகள் வரை மேப் போட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். சுமார் 2 கிலோ எடை உள்ள மனித மூளையின் சக்தி, அதன் நரம்பு மண்டலத்தையும் செல்களின் அமைப்பையும் பொறுத்துதான் இருக்குமாம். இதன் மூலம் பல நோய்களைத் தடுக்கத்தான் இந்த முயற்சி!

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்