மின்சாரம் தேவைப்படாத "பல்ப்'


மின்சாரம் தேவைப்படாத "பல்ப்'எந்த வகையான பேட்டரியோ, மின்சாரமோ தேவைப்படாத பல்ப், "பாட்டில் பல்ப்' என அழைக்கப்படுகிறது.

இந்த பல்பை, கான்கிரீட் வீடுகளில் பயன்படுத்த முடியாது. பிளாஸ்டிக் பாட்டிலில் சுத்தமான தெளிவான நீரை நிரப்ப வேண்டும். இந்த நீர் கெட்டுப் போகாமல் இருக்க வெண்மை நிறத்தைப் பூச வேண்டும். 

வீட்டின் மேற்பகுதியில் சூரிய ஒளி படுமாறு பாட்டிலின் தலைப்பாகம் இருக்க வேண்டும். கீழ்ப்பகுதி வீட்டினுள் வெளிச்சம் தேவைப்படும் இடத்தில் இருக்க வேண்டும்.

மேல் அரைப்பகுதியில் விழும் சூரிய ஒளி, கீழ்ப் பகுதியில் உள்ள தண்ணீரை ஒளிரச் செய்யும். இதன் மூலம் கிடைக்கும் வெளிச்சம், 55 வாட்ஸ் பல்பின் ஒளிக்கு சமமாக இருக்கும்.

பிரேசில் நாட்டில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த எளிய தொழில்நுட்பம் எகிப்து, பெரு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.நன்றி
தினமலர்

Comments