மாயன் - அழித்தொழிக்கப்பட்ட தமிழன்

 கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம். Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்களிடம் இருந்தே அறிவு பெற்றனர் என்கிற கருத்தை முன் வைக்கிறார்.

இந்த மயன்களின் தோற்றம் பற்றி ஆய்வு செயப்பவர்கள் பலரும் இவர்கள் தமிழர்களாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிகின்றனர்.

மாயன்களின் பிரமிடுகள் தமிழ் கட்டிட கலை,   தமிழக கோயில்களின் வடிவமும் குறிப்பாக தஞ்சை கோயில் வடிவமும் பிரமிடுகளும் ஒத்த வடிவம் கொண்டு உள்ளதை கண்டு புருவம் உயர்த்துகிறார்கள் ஆய்வாளர்கள்.  மேலும் மாயன்களின் நாட்காட்டி கணித முறையும்  தமிழர்களின் திருகணித பஞ்சாங்கமும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளது. கதிரவனை ஆதி தெய்வமாக கொண்டவர்கள் தமிழர்கள்  மட்டுமல்ல மாயன்களும் கூடத்தான்.


தமிழ் மண்ணில் இருந்த நாகன்களில் சிலரே தமிழ் மண்ணை விட்டு வெளியேறிய மாயன்கள்  என்கிறது ஆய்வாளர்களின் அறிக்கைகள்.
மாயன் என்பவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள். அறிவில்  சிறந்தவர்கள். தென் இந்தியர்கள் அல்லது ஈழத்தவர்கள். மாயன் என்கிற கட்டமைப்பளர்கள் கட்டிய நகரமே பொன் இலங்கை என்கிறது பண்டைய ராமாயணம்.

அசுர வழிபாடு செய்யும் மக்களும் இவர்களின் தாய் மண்ணில் வாழ்ந்தாதாக சொல்லபடுகிறது. இந்த மாயன்கள் ஒரு நிலையில் தங்கள் கடல் வழி பயணத்தில் அடைந்த இடம்தான் - மெக்ஸிகோ அல்லது கௌதமால. இது தற்போதைய தென் மற்றும் நடு அமெரிக்க மண்.

இன்றும் இலங்கையில் உள்ள பெயர்கள் மேசிகோவில் உள்ளது என்கிறார்கள். இலங்கை என்பதே பல மெக்ஸிகோ நகர்களின் பெயர்களில் உள்ளதாம். பால் இலங்கை, சிவ இலங்கை என்பது தான் சிலோன் என திரிந்ததாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
அப்போகாளிப்டோவில் காட்டப்படும் பழங்குடியினர் தமிழர்கள்.
அழிக்கப்பட்ட அமெரிக்க பழங்குடியினர் தமிழர்கள். ஆஸ்திரேலியா நாட்டின் பூர்வ குடிகளும் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் அடித்துச்சொல்லுகின்றனர்.

உலகின் பிற சாம்ராஜ்யவாதிகளைப் போல, மாயா இனத்தவர்களும் அயலில் இருந்த பிரதேசங்களை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டதை மறுப்பதற்கில்லை. மாயாக்களின் கோயில்களில் நரபலி கொடுக்கப்பட்டதுமுண்டு.

அதே நேரம் சினிமாவில் வருவதைப் போல, “ஆயிரக்கணக்கான உடல்களைப் புதைத்த புதைகுழி” இருந்ததற்கான ஆதாரம் இல்லை. காலனிய காலத்தில் இருந்து தொடரும் பூர்வீக மக்களின் இனவழிப்பை மறைப்பதற்கு மெல்கிப்சனின் அப்போகலிப்டோ என்ற அரசியல் பிரச்சாரப் படம் பாடுபடுகின்றது அவர்களைப் பொறுத்தவரை, “பைபிளுக்கு அப்பால் உலகில் எந்த நாகரீகமும் இருக்கவில்லை. நாளைய தலைமுறை அதைப்பற்றி எல்லாம் அறிந்து வைத்திருக்கக் கூடாது.” அதைத்தான் மெல்கிப்சனின் அப்போகலிப்டோவும் எதிர்பார்க்கிறது. மொத்தத்தில் கதையின் நீதி  இதுதான்!
தமிழன் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டே வருகிறது,
அவன் அழிந்து கொண்டே போகிறான்.. 


Nandri 
Samaran

Comments