தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமா ?
சில தினங்களுக்கு முன்பு பேருந்தில் ஒரு பழைய நண்பரை பார்க்க நேர்ந்தது , அவர் இப்போது ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றார். நீ என்ன செய்கிறாய் என கேட்டார் . நான் கணினி ஆசிரியர் என சொன்னேன். எந்த பள்ளி என கேட்டார் . பள்ளியின் பெயரை கேட்டதும் ஒ மெட்ரிக் பள்ளியா? என கேட்டுவிட்டு இப்ப கல்வித்தரம் குறைய இதுபோல உள்ள தனியார் பள்ளிதான் காரணம் என பேச ஆரம்பித்துவிட்டார் .அவருடன் விவாதம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை காரணம் அவர் மெரிட்டில் வேலைக்கு சேரவில்லை பணம் குடுத்து சேர்ந்தார். இவரை போல பலர் தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமாக பார்க்கின்றனர் . அவர்கள்ளிடம் சில கேள்விகள் ..

 1. இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்தால் எப்பொழுதாவது மாணவர்கள் படிப்பை பற்றி பேசி பார்த்து இருகின்றிகளா ? அரியர்ஸ் , முன்பணம் , சம்பளம் பற்றி மட்டும்தான் இருக்கும் .ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சந்தித்தால் அதில் கண்டிப்பாக மாணவர்களை பற்றி பேச்சு இருக்கும்
 2. 1500 முதல் சம்பளம் வாங்கும் ஆசிரியர் கூட மாணவன் மேல் காட்டும் அக்கறையை 30000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் காட்டுவதில்லை .
 3. எந்த தனியார் பள்ளி ஆசிரியரும் 10 அல்லது 12 வகுப்பு போது தேர்வு விடைத்தாள் திருத்தும் இடங்களில் போராட்டம் நடத்துவதில்லை .
 4. இதுவரை மாணவர்கள் நலனுக்காக ஏதாவது போராட்டம் நடத்தி உள்ளார்களா ?
 5. எங்களிடம் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்ப விவரம் முதற்கொண்டு எங்களுக்கு தெரியும் . தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவனின் பெயர்களும் பல ஆசிரியர்களுக்கு தெரியாது .
 6. தனியார் பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் தவறாக நடந்தால் அவரை வேலையை விட்டு நீங்க முடியும் ஆனால் அரசு பள்ளியில் அவருக்கு இடம் மாற்றம் மட்டுமே , இங்கு செய்த தவறை வேறு இடத்தில் தொடரபோகிறார் .
 7. பல வருடங்களுக்கு முன் படித்த மாணவன் கூட எங்களிடம் தொடர்பில் இருப்பான் , கல்லூரியில் நடக்கும் பாடத்தில் வரும் சந்தேகங்களை கூட போனில் கேட்பான் . அரசு பள்ளியில் இதற்க்கு வாய்ப்பில்லை .
 8. மாணவன் வீட்டில் நடக்கும் சுக துக்கங்களில் நாங்கள் கலந்து கொள்வோம் . ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் தகுதி பார்ப்பார்கள் .
 9. TET (ஆசிரியர் தகுதி தேர்வு ) க்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் . காரணம் பணம் கொடுத்து வேலை வாங்கிவிட்டோம் இனி எப்படி தேர்வு எழுதுவது என .
 10. 5 வருடத்திற்கு ஒருமுறை அனைத்து ஆசிரியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு வைத்து அதில் வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் பணியில் தொடரலாம் என ஒரு சட்டம் வந்தால் இங்கு உள்ள ஆசிரியர்களில் 90 % அதை எதிர்ப்பார்கள் .

டிஸ்கி : இது பெரும்பாலான அரசு ஆசிரியர்களுக்கு பொருந்தும் . இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. பல ஆசிரியர்கள் உண்மையில் அர்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்

டிஸ்கி : இதில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது வேறு கருத்து இருந்தால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள்

இதையும் படிக்கலாமே :

வாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்

எனக்கு ஒரு சந்தேகம் ...


நான் அழகா பொறந்தது என் தப்பா ?


 

Comments

 1. தவறு செய்யும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், உங்கள் பகிர்வு நல்ல சவுக்கடி...!அரசும் தகுதியானவர்களை தேர்வு செய்வதில் அக்கறை காட்ட வேண்டும்.அப்போது தான்,ஏழை மாணவர்களுக்கும் முறையான கல்வி சென்றடையும்.நல்ல பகிர்வுக்கு நன்றி...!

  ReplyDelete
 2. இக்கட்டுரை இயலாமை கோபத்தின் வெளிப்பாடு.... பணம் கொடுத்து அரசு ஆசிரியர் பணி கிடைக்கிறதா ?... தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவனைப்பற்றியோ அவ்வூர் பற்றியோ தெரியுமா ? வேடிக்கை. கொஞ்சம் மார்க் குறைந்தாலே அவனை துரத்தி விடும் தனியார் பள்ளிகள் படிக்கும் மாணவனை படிக்க வைப்பதில் என்ன சாதனை ? உங்கள் குற்றச்சாட்டு சிலருக்கு பொருந்தும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. உங்களுக்காகவும் தான் அரசு ஆசிரியர்கள் போராடுகிறார்கள். அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தவர்கள்தான் . தேர்வுகளை மட்டும் தொடர்ந்து வைத்து தேர்ச்சி விகிதத்தை கூட்டுவதை விட்டு , ஆளுமை வளர்ச்சிக்கும் பல் திறனையும் , சிந்தனைதிறனையும் மேம்படுத்த தனியார் பள்ளிகளும் ஆசிரியர்களும் . இல்லையேல் மாணவன் சமுத்தில் இயங்கும் இயந்திரம் போல் செயல்படுவான். மேற்கூறியபடி திறமையோடு செயல்பட்டால் தகுதி தேர்வில் வெற்றிபெறுவது தங்களுக்கும் எளிதாகும். பொறாமை கோபங்களை கடந்து... உங்கள் ஆற்றலை மேம்படுத்தி வெற்றி பெற தனியார் பள்ளி ஆசிரிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்