நம்பர் பிளேட்டை எழுதும் போது கவனிக்க வேண்டி‌யவைநம்பர் பிளேட்டை எழுதும் போது கவனிக்க வேண்டி‌யவை


          வித்தியாசமான வாகனங்களை வாங்குவது தான், இந்நாளில் பிரபலமாக இருக்கிறது. வாகனத்தில் வித்தியாசம் இருக்கலாம், தவறில்லை. ஆனால், அதில் உள்ள நம்பர் பிளேட்டில், பற்பல வித்தியாசங்கள் இருக்கும் போது தான், தலை சுற்ற ஆரம்பிக்கிறது.
இரு சக்கர வாகனம், கார், கனரக வாகனம், லாரிகள், பஸ் உட்பட வாகனங்களின் நம்பர் பிளேட்களில், பிடித்த அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர்களின் படம் வரைந்திருப்பது, பெயர் எழுதுவது மற்றும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி, எண்களை, வித்தியாசமான கோணங்களில் எழுதுவது, தற்போது அதிகரித்துள்ளது. வாகனங்கள் மூலம் அசம்பாவிதங்கள் நடந்தால், அதை கண்டறியவே, அரசு சார்பில், வாகன பதிவு எண் கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற வித்தியாசமான போர்வை என்ற பெயரில், அசம்பாவிதம் ஏற்படும் போது, வட்டாரப் போக்குவரத்துறை மற்றும் போலீசாருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்த்து, நம்பர் பிளேட்களில் உள்ள வாகனப் பதிவு எண்களை, அரசு விதிமுறைப்படி எழுதினால் நல்லது.

இதற்காக சில ஆலோசனைகள்:

பிளேட் அளவு: டூ-வீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் முன்புறம், நம்பர் பிளேட்டின் அளவு 285 மி.மீ., நீளமும், 45 மி.மீ., உயரமும், பின்புறம் 200 மி.மீ., நீளம், 100 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.

* கார் மற்றும் இதர வாகன நம்பர் பிளேட்டின் பின்புறம், 500 மி.மீ., நீளமும், 120 மி.மீ., உயரமும், முன்புறம் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும். 

* நடுத்தர மற்றும் கனரக வாகனத்தின் நம்பர் பிளேட், 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.

* 70 சி.சி.,க்கு கீழ் உள்ள டூ-வீலர் நம்பர் பிளேட் முன்புறம் எழுத்துக்கள் 15 மி.மீ., உயரத்தில், 2.5 மி.மீ., தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறம், 35 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

* 70 சி.சி.,க்கு மேல் உள்ள டூ வீலரில், முன்புறம் 30 மி.மீ., உயரத்தில், 5 மி.மீ., தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறத்தில் 40 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

* மூன்று சக்கர வாகனத்தில் 35 மி.மீ., உயரமும், 7 மி.மீ., தடிமன், 5 மி.மீ., இடைவெளி இருக்க வேண்டும். இதர வாகனங்களில், 65 மி.மீ., உயரமும், 10 மி.மீ., தடிமன் மற்றும் 10 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும். இதை மீறும் போது, மோட்டார் வாகனச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். முறையான வழிமுறைகளை பின்பற்றினால் நல்லது தானே.


Comments