பி.பி (BP-blood pressure)-யை கட்டுபடுத்தனுமா?பி.பி (BP-blood pressure)-யை கட்டுபடுத்தனுமா?


இதயம் நம் உடலில் இருக்கும் ரத்தத்தை பம்ப் செய்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் போது, சுறுங்கி விரிவதையே ரத்த அழுத்தம் என்கிறோம். இதயத் தசைகள் சுருங்கும்போது அழுத்தம் கூடுதலாக இருக்கும். அதுதான் 120 சிஸ்டோலிக் அளவு. இதயம் விரியும் போது அழுத்தம் குறைவாக இருக்கும். அதுதான் 80 டைபாஸ்டோலிக் அளவு. அதாவது ஒரு மனிதனுக்கு 120/80 என்ற மில்லிமீட்டர் பாதரச அளவு இருந்தால் அவர் நார்மல்.
120/80 என்ற நிலையைத் தாண்டி 139/89 வரை கூட போகலாம். அதை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முந்தைய நிலை என்பர். இந்த எல்லையையும் தாண்டி, அதாவது 140/90 தாண்டிவிட்டால் அதுதான் உயர் ரத்த அழுத்தம் இதனை உடனே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாக வேண்டும்.
இல்லாவிட்டால், ஹார்ட் அட்டாக், கிட்னி ஃபெயிலியர், சர்க்கரை நோய், கண், மூளை பாதிப்பு என்று சகல நோய்க்கும் வழிவகுத்துவிடும்.


பி.பி.யைக் கட்டுப்படுத்தும் வழிகள்


  • உப்பு தான் பி.பி.யின முதல் எதிரி. உப்பு அதிகம் உள்ள எந்தப் பொருளையும் தொடக்கூடாது. 


  • இடுப்பின் சுற்றளவை அடிக்கடி அளவிட வேண்டும். அளவுக்கு அதிகமான எடையை, சதையை இடுப்பில் வைத்திருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சுருக்கமாக தொப்பை போடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். 


  • தொப்பை மட்டுமல்ல, உடல் எடை கூடினாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பி.பி. உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் அளவுக்கு மீறி உடல்எடை உள்ளவர்கள். அதனால் உடல் எடையில் கவனம் வேண்டும். 


  • கவலை, பதற்றம், பயம், மன அழுத்தம், மன இறுக்ம் இருந்தால் கண்டிப்பாக பி.பி. எகிறும். யோகா, தியானம், மூச்சு உள்வாங்கி வெளியிடுதல் போன்ற பயிற்சியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கப் பார்க்க வேண்டும். 


  • புகை பிடிப்பது பி.பி.யின் இன்னொரு பெரிய எதிரி. ஒரு சிகரெட் புகைத்தாலே 10 மி.மீ. வரை ரத்த அழுத்தம் உயரும். பி.பி. உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை
 பி.பி. இருந்து காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றுபவர்கள், காபி சாப்பிடுவதற்கு முன்பும், காபி சாப்பிட்ட பின்பும் பி.பி.யை செக் பண்ணுங்கள். 5-10 மி.லி. அதிகரித்தால் காபியை தவிர்த்து விட வேண்டும். மற்றவர்கள் காபி சாப்பிடலாம்.குளிர் பானங்கள் மட்டுமல்ல, டின்னில் அடைத்து விற்கும் உணவுப் பொருள்கள், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள் ஆகியவற்றில் ருசிக்காக அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும் கொழுப்புப் பொருட்களும் ஒரு வகையான வினோதமான உப்பினாலும்தான் 60 சதவிதம் மக்களுக்கு பி.பி.யே எகிறுகிறது. கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத உணவுகளும் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்களும் தான் பி.பி.யை கட்டுப்படுத்தும். பூண்டு நல்லது.என்னென்ன செய்ததால் பி.பி. கூடியுள்ளது. எதை தவிர்த்தால் பி.பி. குறைந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு அதன்படி நடக்க, நாம் அடிக்கடி பி.பி. செக்கப் செய்வது நல்லது. பி.பி. குறையாமல் இருந்தால் அது வேறு ஒரு பிரச்னை உள்ளது என அர்த்தம். அதை உடனே மருத்துவரிடம் சென்று தீர்க்க அடிக்கடி செக்கப் அவசியம். குறைந்தது 45 நிமிடங்கள் தொடர்ந்து சீராக மிதமா வேகத்தில் நடப்பவர்களுக்கு பி.பி.யே வராது. நடக்க முடியாதவர்கள் 30 நிமிடங்களில் உரிய உடற்பயிற்சி செய்தாக வேண்டும். மாத்திரைகளால் கட்டுப்படுவது என்பது தற்காலிகமானதே. இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் கட்டாயம் பி.பி- யை நம் கட்டுக்குள் வைக்கலாம்.

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்