FACEBOOK இல் ரசித்தது

அடிப்பாவி மகளே...

எவனையோ லவ் பண்றேன்னு என்கிட்டயே வந்து சொல்லுறியே...

கொஞ்சம் கூட ' அம்மா ' ன்னு ஒரு மரியாதை இல்லாம...

"சும்மா கத்தாதேம்மா...
இன்னும் ஆறு மாசத்துல நானும் தான் அம்மா ஆகப்போறேன்!!..."
================================================================
ஒரு பொருளை சுத்தமாக ஆக்க வேண்டுமானால் மற்றொரு பொருள் அழுக்காக ஆக வேண்டி இருக்கும்.

ஆனால் எந்தப் பொருளையும் சுத்தம் ஆக்காமலேயே பல பொருட்களை உங்களால் அழுக்காக ஆக்க முடியும்.
==============================================================================
காதல் என்பது மழை போல எல்லோருக்கும் நனைய ஆசை இருக்கும் பலர் தயக்கத்தோடு தள்ளி நிற்கிறார்கள் ரசனையானவர்கள் நனைகிறார்கள்
====================================================================
தனிமை

இதுதான் எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும் போதிமரம்.....

தனிமை

இதுதான் எல்லா பாவத்துக்கும் தாய்......

தனிமை

இதுதான் எல்லா நற்செயலுக்கும் பிதா.......

ஆள்,அரவமற்ற இடத்தில் தான் ஒரு மனிதனின் உண்மை சொரூபம் வெளிவருகிறது...

அதை வெற்றி கொள்பவன் ஞானியாகிறான்

அது வெற்றி கொள்பவன் பாவியாகிறான்
 
======================================================================
பெண்கள் கவனமாக இருக்க
வேண்டிய தருணங்களில் ஒன்று,
உங்கள் இடுப்பில் உள்ள
குழந்தையை அந்நிய ஆடவர்
கொஞ்சும் நேரம்!
===================================================================
முன்பின் அறியாத கடவுளை நான் நம்புவதில்லை என்றார் அந்த ரயில் பயணி...

அருகிலிருந்த சக பயணி, அதனாலென்ன! நீங்கள் கடவுள் தன்மையை நம்புகிறீர்களே, அது போதும் என்றார்...

நாத்திகருக்குப் புரியவில்லை...

இந்த ரயிலை இயக்குபவரை நீங்கள் முன் பின் அறிந்ததில்லை. ஆனால் பயணம் செய்கிறீர்கள். சற்று முன் நீங்கள் அருந்திய தேநீரை விற்பனை செய்தவரை உங்களுக்குத் தெரியாது. நம்பி வாங்கினீர்கள்...
.
உலகில் உள்ள நல்ல தன்மைகளை நம்புவதே கடவுளை நம்புவதற்குச் சமம் என்றார் சகபயணி...
 
 நன்றி : FACEBOOK நண்பர்கள் 
 
 
 

Comments