மாணவர்களுக்காக ஒரு சட்டம் (PUPS-2012)

மத்திய அரசு மாணவர்கள் நலன் ( !!) கருதி Prophibition of Unfair  Practices in School Bill -2012 எனும் ஒரு சட்டத்தை கொண்டு வர உள்ளது . இந்த சட்டம் அனைத்து அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை கட்டுபடுத்தும் என கூறியுள்ளது . அந்த சட்டத்தில் உள்ள சில சரத்துகளை பார்க்கலாம் ..
  1. புத்தகங்கள் , சீருடைகள் , மற்ற கல்வி உபகரணங்களை அந்த பள்ளியில்தான் வாங்க வேண்டும் என கட்டாய படுத்த கூடாது .

# கண்டிப்பாக இதை பின்பற்றலாம் . காரணம் பல பள்ளிகளில் இலவச பிரதிகளாக வரும் புத்தகத்தை கூட மாணவர்களிடம் விலைக்கு விற்கின்றனர் . ஒரு புத்தகத்திற்கு பதிப்பகம் 35 % வரை கழிவு தருகிறது ஆனால் இவர்கள் போக்குவரத்து செலவு என கூறி அடக்க விலையை விட அதிகமாக விற்கின்றனர் .

  1. நேரடியாகவோ , மறைமுகமாகவோ கட்டாய நன்கொடை வாங்க கூடாது .

# எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை எனக்கு இந்த பள்ளியில் தான் அட்மிஷன் வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் இருக்கும் வரை இது சாத்தியமில்லை .

  1. HIV, TB போன்ற நோய்களை காரணம் காட்டி அட்மிஷன் மறுக்க கூடாது .

# நல்ல கருத்து ஆனால் அது போன்ற மாணவர்களுடன் தங்கள் மகன்களை படிக்க வைக்க பெற்றோர் முதலில் முன்வர வேண்டும் .

  1. மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ , மன ரீதியாகவோ எந்த தண்டனையும் வழங்க கூடாது . அப்படி தண்டிக்கும் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை .

 # இது விவாதிக்க படவேண்டிய விஷயம் . சில மாணவர்கள் தான் அன்புக்கு கட்டுபடுகிரர்கள் . பலர் அடிக்கு தான் கட்டுபடுகிரர்கள் . (காட்டுமிராண்டித்தனமாக அடிப்பது கண்டிப்பாக குற்றம் ). இது மாணவர்கள் எப்படி போனா என்ன நம்ம பாதுகாப்பா இருப்போம் என ஆசிரியர்கள் என்னும் நிலைக்கு கொண்டு  சென்றுவிடும் . நாம் என்ன செய்தாலும் ஆசிரியர்கள் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம மாணவர்கள் மத்தியில் வர வாய்ப்புள்ளது .

  1. படிப்பை காரணம் காட்டி தேர்வு எழுத அனுமதி மறுக்க கூடாது .

# மிக்க நல்ல விஷயம் . நல்ல படிக்கிரவனை மதிப்பெண் எடுக்க செய்ய ஆசிரியர் எதுக்கு ? படிக்காதவனையும் படிக்க வைப்பவந்தான் நல்ல ஆசிரியர் அதுவே நல்ல பள்ளி .


இந்த சட்டம் சரியா இதில் என்ன குறைபாடுகள் அல்லது நிறைகள் உள்ளன என உங்கள் கருத்தை பின்னுட்டத்தில் சொல்லுங்கள் .


இதையும்  படிக்கலாமே :

இதையும் படிக்கலாமே :


இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..Comments

  1. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்