காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்


காலை தேநீர்

தொழிற்களம் குழுவின் இனிய காலை தேநீர் வணக்கம்.முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்! எத்தனை வாய்ப்புகள் நம்மைத்தேடி வந்தாலும் அதை முயன்றால் மட்டுமே நம் வாழ்வில் வெற்றி நிச்சயம். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. இந்த நாள் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமைய தொழிற்களம் வாழ்த்துகிறது.

இன்றைய சிந்தனைத்துளிகள்.v  எந்த ஊசியும் இரு பக்கமும் கூர்மையாக இருக்காது. அறிவும் அப்படித்தான்.
v  நம்பிக்கை குதிரைகள் வேகமாக செல்லும். ஆனால் அனுபவ கழுதைகள் மெதுவாகத்தான் செல்லும்.
v  வயிறு நிறைந்த புறாவுக்குப் பழமெல்லாம் புளிப்பு.
v  பெண் சிங்கம் ஒரு குட்டிதான் ஈனும். ஆனால் அது சிங்கக்குட்டி.
v  பழத்தை சாப்பிடுங்கள் மரத்தைப் பற்றி விசாரிக்க வேண்டாம்.

தினம் ஒரு தகவல்

முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.

Comments

 1. நன்று. முகப்பருவுக்கு எந்த பேஸ்ட் வைக்கணும்?

  ReplyDelete
 2. அத்தனையும் அருமை.
  ஆழ்ந்து யோசிக்கவேண்டிய அவசியமில்லை அவ்வளவு எளிது.
  இதற்கு தொழிற்களத்திற்கு நன்றிகள் பல.
  ஈடில்லா ஒரு பயன்தரும் களம் என்றே சொல்லலாம்.
  உழைத்து முன்னேற முயற்சி வேண்டுமென்ற விழிப்புணர்வு தருகிறது.

  வாழ்த்துக்கள் தங்களின் முயற்சி எல்லோரும் முன்னேறவேண்டுமென்ற நல்லெண்ணம்...

  ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்